Friday 2 March 2018

ஜெபம்

ஜெபம்

அன்புள்ள ஆண்டவரே நாங்கள் நடக்க வேண்டிய வழியை எங்களுக்கு கற்றுத் தாரும். நாங்கள் தடுமாறும் பொழுது தடுமாற்றம் இன்றி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து நடக்க வேண்டிய வழியை எங்களுக்கு காண்பியும். உம்முடைய பாதையை கண்டு நடக்கத் தக்கதாக உம்முடைய வெளிச்சத்தை காணும் படி எங்கள் கண்களை திறந்தருளும் ஸ்வாமி. எங்கள் வாழ்க்கையில் நடக்கும் சிறிய அன்றாட நிகழ்வுகளுக்கும், பெரிய முடிவுகளுக்கும் நாங்கள் இதைக் கேட்கிறோம். எங்களுடைய எல்லா செயல்களிலும் முழுவதும் கூட நீர் இருந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு போதித்தருளும். நாங்கள் உமது சத்தத்தை கூர்ந்து கவனிக்கச் செய்யும். எல்லா நேரங்களிலும் உமது பேச்சுக்களும், நீர் சொல்வதும், செய்கின்ற செயல்களும் எங்கள் அறிவுக்கு விளங்கி கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம் ஸ்வாமி. இது எங்களுக்கு பிரச்சினையும் உம்மை புரிந்து கொள்கின்ற திறன் இல்லாமையும் என்பது எங்களுக்கு தெரியும் கர்த்தாவே. உம்முடைய நாமத்தினாலே உம்மை அறிகின்ற அறிவையும், புரிந்து கொள்கின்ற ஞானத்தையும் எங்களுக்கு தாரும் ஆண்டவரே. உம்மை புரிந்து கொள்ள எங்களுக்கு உதவி புரியும்அதுவே நாங்கள் உமக்கு கீழ்படியவும் நீர் எங்களிடம் எதிர்பார்கின்ற காரியங்களை செய்யவும் எங்களுக்கு துணை புரியும். ஆமென்.

நினைவிற்க்கு...

எரேமியா 29:11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.


எப்போதும் நாங்கள் உமக்கு கனி கொடுக்கும் ஒரு நல்ல மரமாக இருக்க விரும்புகிறோம். கடவுளே எங்கள் உள்ளத்தில் இப்பொழுதே வாரும், உமக்குப் பிரியமில்லாத காரியங்கள், செய்கைகள் எங்களிலும் எங்கள் உள்ளத்திலும் இருக்குமானால் தயவாக அதை எங்களுக்கு வெளிப்படுத்தி எங்களை சுத்தப்படுத்தும் கர்த்தாவே. எப்பொழுதும் எந்நேரமும் பரிசுத்தத்தோடும் உண்மையோடும் கடவுளுக்குள்ளாக நடக்க எங்களுக்கு கற்றுத் தாரும். தேவையற்ற கவனச் சிதறல்களிலிருந்து எங்களை காபாற்றி உம்முடைய வார்த்தையை, சத்தத்தை நோக்கி பார்க்க எங்களுக்கு உதவி புரியும். அதில் தடைகளின்றி உம்மோடு நடந்து வர உதவி செய்யும். ஆமென்.


பிரியமான கடவுளே எல்லாவற்றையும் எங்களுக்கு கற்றுத் தாரும். உம்மை அறிந்து கொள்ளும் ஞானத்தையும் , உம்முடைய வார்த்தையை எங்களில் தக்க வைத்துக் கொள்ளவும் உதவிபுரியும். எதை நாங்கள் வாசிக்க வேண்டும் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்தும், அப்பக்கஙகள் உயிருடன் இருக்கும் படி செய்யும். எங்களுடைய தியான நிலையின் போது நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய உம்முடைய வார்த்தைகளை எங்களுக்கு வெளிப்படுத்தும். உம்முடைய நல் மனதையும், நற் போதனைகளையும் எங்களுக்கு கற்றுத் தாரும். உம்முடைய சாந்த இருதயத்தில் இருப்பதை நாங்கள் தேர்ந்தெடுத்து உம்மிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள எங்களுக்கு உதவி புரியும். ஆமென்.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord