இன்றைய தியானம் :" நான்கு வார்த்தைகள்"
தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே ஆண்டவரும் அருமை இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள் பரலோகத்தின் தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக.
1.எண்ணப்படுவான்.
நீதிமொழிகள் - 17 :28
பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
2. ஆசீர்வதிக்கப்படுவான்
நீதிமொழிகள் - 22:9
கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.
3.இரட்சிக்கப்படுவான்.
நீதிமொழிகள் - 28:26
தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
4.உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
நீதிமொழிகள் - 29:25
மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
ஆசீர்வாதம்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
No comments:
Post a Comment