கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே, இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.
பரலோகத்தின் தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக.
இயேசுகிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக்கொண்டுள்ள அத்தனை ஜனங்களும் பாக்கியமானவர்கள். அவர்களுக்கெண்றே தேவன் விஷேசித்த ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார்.
1.அவர் கையில் வரையப்படும் பாக்கியம்.
இதோ என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. (ஏசா.49:16)
2.பரலோகத்தில் பெயர் எழுதப்படும் பாக்கியம்.
பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும்இ யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும்இ பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கம்
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும்இ ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். (எபிரெ.12:23-24)
3.தேவதூதர்களால் பாதுகாக்கப்படும் பாக்கியம்.
இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா? (எபிரெ1:14)
கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். (சங்34:7)
4.பரிசுத்த ஆவியால் நிறப்பப்படும் பாக்கியம்.
அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும்இ சாயங்காலமாயிற்றுஇ பொழுதும் போயிற்று என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். (லூக்.24:49)
5.நித்திய மகிழ்ச்சி அடையும் பாக்கியம்.
கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பிஇ ஆனந்தக்களிப்புடன் பாடிஇ சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம். (ஏசாய.35:10)
இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.
No comments:
Post a Comment