இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள் இந்த தியான பகுதியின் வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்சிக்கொள்கின்றேன்.பரலோக தேவன்தாமே உங்களை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக
1.மனதில் உறுதி
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால்இ நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். (ஏசாயா 26:3)
அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டுஇ அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை. (ரூத்.1:18)
2.உத்தமத்தில் உறுதி:
அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும் என்றாள். (யோபு.2:9)
ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோதுஇ கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. (ஆதி17:1)
3.விசுவாசத்தில் உறுதி:
விசுவாசத்தில் உறுதியாயிருந்துஇ அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. (1பேதுரு.5:9)
4.செபத்தில் உறுதி:
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள் (ரோம12:12)
5.வசனத்தில் உறுதி:
அவர்கள் புறப்பட்டுப்போய்இ எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்துஇ அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென். (மாற்.16:20)
6.நற்கிரியைகளில் உறுதி:
நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். (அப்போஸ்.10:38)
ஏனெனில்இ நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டுஇ தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். (எபேசி.2:10)
7.பரிசுத்தத்தில் உறுதி:
தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். (1தெசலோ.4:7)
அப்படியிருக்கஇ சகோதரரேஇ நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்றுஇ தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. (ரோம.12:1.)
செபம்:
அன்பு ஆண்டவரே, நீர் உமது பிள்ளைகளாகிய எங்களுக்கு காட்டியுல்ல உறுதியில் நாங்கள் உறுதியாக இருக்கவும் அதனால் நாங்கள் உமக்கு சாட்சிகளாக வாழ எங்களுக்கு கிருபை செய்தருளும் ஆமென்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
No comments:
Post a Comment