இன்றைய தியானம்:" நீங்கள் தனிமையில் இல்லை"
தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சசோதரிகளே ஆண்டவரும் அருமை இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.
பரலோகத்தின் தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக
ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்திஇ முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் (சங்.73:23-24)
உங்கள் வாழ்க்கையில் சில நேரங்களில் உங்கள் துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள இயலாத நிலை ஏற்படலாம்.காரணம் நீங்கள் அவ்வாறு பகிர்ந்துக்கொள்ளும்போது அவை உங்களை அன்பு செய்பவர்களை வருத்தப்படச் செய்யலாம்,உங்களுக்கு அவமானமாகவோ, சட்டப்பிரச்சனையாகவோ,உனக்கு ஏற்படும் பிரச்சனைகளை பகிர்ந்துக்கொள்வதற்கான கட்டுப்பாடு இருக்கலாம் என்ன காரணங்களாக இருந்தாலும் நீங்கள் உங்கள் பிரச்சனைகளில் தனிமையை உணர்வீர்கள்.
இச்சூழ்நிலையில் நீங்கள் நினைவில் கொள்ளக்கூடியது என்னவென்றால் தேவனை உங்கள் மீட்பராக ஏற்றுக்கொள்ளும்போது நீங்கள் ஒருபோதும் தனிமையில் இல்லை.
அன்றியும்இ நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். (எபேசி.4:30)
நீங்கள் உங்களைப்பற்றியும்,உங்கள் சூழ்நிலைகளைப்பற்றியும் அறிந்திருப்பதைவிட தேவன் உங்களையும் உங்கள் சூழ்நிலைகளையும் பற்றி நன்றாகத்தெரிந்து வைத்திருக்கின்றார். தேவன் ஒருவரே உங்களை வழி நடத்தி தேற்றுபவர்.
ஒரு போதும் நீங்கள் உங்களை தேவனிடம் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ளாதீர்கள்.தேவனின் பிரசனத்தில் அமைதியாக அமர்ந்து தேவன் கூறுவதைக் கேளுங்கள்,
உங்களுடைய ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தேவன் என்ன தீர்வுச்சொல்கின்றார் என்பதை திறந்த மனதுடன் கேளுங்கள்.தேவன் ஒருவரே சிறந்த உண்மையான நன்பன் தேவனைவிட சிறந்த ஒருவரை நீ பெற இயலாது.
ஜெபம்
அன்பின் பிதாவே என்னை விட்டுவிலகாமல், வெறுக்காமல், காத்து வரும் உம்முடைய கிருபைக்காய் உமக்கு நன்றி.உம்முடைய நேர்மையான பாதையில் என்னை வழி நடத்தும் அப்பா ஆமென்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும்,தேவனுடைய அன்பு,பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக ஆமென்
No comments:
Post a Comment