Friday, 18 August 2017

"என்னை உயிர்ப்பியும்."

இன்றைய தியானம் :"என்னை உயிர்ப்பியும்."



தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே ஆண்டவரும் அருமை இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.
பரலோகத்தின் தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக

சங்கீதம் 85:6  உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?

 1. உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
சங்கீதம் 119:25  என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
சங்கீதம் 119:107  நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
சங்கீதம் 119:154  எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.

 2. உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
சங்கீதம் 119:37  மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.

 3.  உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
சங்கீதம் 119:40  இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.

 4. உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்.
சங்கீதம் 119:88  உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்.
சங்கீதம் 119:159  இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

 5.உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும்.
சங்கீதம் 119:149  உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும்.

 6. உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
சங்கீதம் 119:156  கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.

 7. உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்.
சங்கீதம் 143:11  கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும்.

ஆசிர்வாதம் 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.


No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord