காலை தியானம் :" நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவு"
தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே ஆண்டவரும் அருமை இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.
பரலோகத்தின் தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும். அவனுடைய வழியின் மேல் அவர் பிரியமாயிருக்கிறார். (சங்கீதம் 37:23).
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
ஏன் தேவன் நான் என்ன செய்ய வேண்டுமென்பதைக் காண்பிக்கக் கூடாது என்று ஒருவேளை நீங்கள் எண்ணலாம். அவர் உங்களுக்கு எத்திசையையும் காண்பிக்காததைப் போல் இன்று நீங்கள் உணரலாம். ஆனால் திடன்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் உணர இயலாவிட்டாலும் கூட உங்கள் சூழ்நிலைகளில் பிதாவானவர் செயலாற்றிக்கொண்டும், உங்களை வழிநடத்திக் கொண்டும் தான் இருக்கிறார்.
நண்பரே, தேவன் செவிசாய்க்கிறார். அவர் உங்கள் இருதயத்தின் விசும்பல்களையும், எத்திசையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற உங்கள் குழப்பத்தையும் கூடப் புரிந்து கொள்கிறார். நீங்கள் அவரைத் தேடும் போது, அவர் தம் திட்டங்களை உங்களுக்கு மறைப்பது என்பது அவருடைய குணாதிசயத்திற்கு முற்றிலும் அடுத்ததல்ல. (எரேமியா 29:11-13).
உண்மை என்னவென்றால், பிதாவானவர் தமது சித்தத்தை உங்களுக்கு காண்பிக்கவும், அதிலே நீங்கள் நடக்கவும் வானத்தையும், பூமியையும் கூட அசையப்பண்ணுவார். ஆயினும் மெய்யான, நிலைவரமான விசுவாசத்தை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஏதுக்கள் இன்னதென்று அவர் புரிந்து கொண்டு இருக்கிறார். அதினால்,அவர் எல்லாவற்றையும் ஒரே பொழுதில் காண்பித்து விடக் கூடாதென்பதில் மிகவும் கவனமாய் இருக்கிறார். எனவே அமைதலாயிருந்து இந்த ஒரு க்ஷணத்திலும் கூட பிதா உங்களுக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுக்கிறார் என்று நிச்சயமாக உணர்ந்து அவரை நம்புங்கள். அவர் தம்முடனான பாதையில் நீங்கள் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கான போதிய வெளிச்க்கத்தை மட்டுமே காண்பிப்பார்.
ஜெபம்
கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன். --இது மிகவும் கடினமானது. ஆயினும் நான் விசுவாசத்தில் நடக்கிறேன் --அடி மேல் அடி எடுத்து வைத்து --நீர் நம்பிக்கைக்கு உரியவர் ஆதலால் உம்மை விசுவாசிக்கிறேன்.
ஆசிர்வாதம்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
No comments:
Post a Comment