இன்றைய தியானம் :" கர்த்தருக்குக் காத்திரு"
தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே ஆண்டவரும் அருமை இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.
பரலோகத்தின் தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக
மீகா 7:7 நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.
நீதிமொழிகள் 13:12 நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
1. பொறுமையுடன் காத்திரு.
சங்கீதம் 40:1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.
2.திடமனதாய் காத்திரு.
சங்கீதம் 27:14 கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு.
சங்கீதம் 31:24 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
3.நம்பிக்கையுடன் காத்திரு.
சங்கீதம் 39:7 இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.
சங்கீதம் 62:5 என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.
4. எதிர்பார்ப்புடன் காத்திரு.
சங்கீதம் 123:2 இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
5. இடைவிடாமல் காத்திரு.
சங்கீதம்.25:5 உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
6. அமைதியாய் காத்திரு.
சங்கீதம் 46:10 நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
7. ஆவலோடு காத்திரு.
சங்கீதம் 52:8 நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
52:9 நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.
ஆசிர்வாதம்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
No comments:
Post a Comment