Friday, 18 August 2017

இன்றைய தியானம் :"கர்த்தர் சமீபமாயிருக்கிறார்."

இன்றைய தியானம் :"கர்த்தர் சமீபமாயிருக்கிறார்."




உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.


பிலிப்பியர் 4:5 உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் 

தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

ஏசாயா 50:8  என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.


1.Those who pray (Ps. 145:18).

 சங்கீதம் 145:18  தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.


2. Those who fear God (Ps. 85:9).

சங்கீதம் 85:9  நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.


3. Those broken in heart (Ps. 34:18).

சங்கீதம் 34:18  நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.


4. Those who draw nigh to God (Jas. 4:8).

யாக்கோபு 4:8  தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.


 5. Those who worship.

உபாகமம் 4:7  நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?


 6. Those who obey the Word of God.

உபாகமம்  30:14  நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.


நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

 

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord