Thursday, 17 August 2017

இன்றைய தியானம் :"கர்த்தர் எனக்குச் சகாயர்"

இன்றைய தியானம் :"கர்த்தர் எனக்குச் சகாயர்"





தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே ஆண்டவரும் அருமை இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.

பரலோகத்தின் தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக


நீ பயப்படாதேஇ நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதேஇ நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் (ஏசாயா.41:10)


1.எதிர்பாராத உதவி:

ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போதுஇ இதோஇ பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய்இ கடாவைப்பிடித்துஇ அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.(ஆதி.22:13)


2.தெரியாத உதவி:

அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்கஇ காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.

 நீ எழுந்துஇ சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய்இ அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். (1இராஜ.17:4,9)


3.முக்கியமான உதவி:

இரவின் நாலாம் ஜாமத்திலே இயேசு கடலின்மேல் நடந்துஇ அவர்களிடத்திற்கு வந்தார். (மத்.14:25)


நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.


ஆசிர்வாதம் 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.


No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord