இன்றைய தியானம் :"உமக்காக ஓர் இடம்"
தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே ஆண்டவரும் அருமை இரட்சகருமான இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.
பரலோகத்தின் தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக
தேவன் தமது சித்தத்தின்படிஇ அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். (1கொரி.12:18)
நான் இங்கு தகுதியானவனா என்பது எனக்குத்தெரியாது என்னைத் தவிர அனைவருக்கும் இங்கு இடம் உண்டு. இதுப்போன்ற எண்ணங்கள்,உணர்வுகள் உணக்கு வந்ததுன்டா? உனக்கு பதவி இல்லாததால் உனக்கு இங்கு இடம் இல்லை,நீ தேவையில்லை என்று நீ ஒதுக்கப்பட்டதுன்டா? உன்னை கீழேக்கொண்டுவரக்கூடிய,உன்னை ஊக்கப்படுத்தா இதுப்போன்ற பழமையான சாத்தானின் செயல்களுக்கு நீ இடம் கொடுக்காதே.ஒவ்வொருவருக்கும் தேவன் ஒரு இடம் வைத்துள்ளார்,உனக்காகவும் தேவன் ஒரு இடம் வைத்துள்ளார்.
கால் பந்து விளையாடும் இடத்தில் விளையாடுபவர்களுக்கு உதவிச்செய்வதற்காக பையன் ஒருவன் தன் கையில் தண்ணீர்,துன்டு இதை வைத்துக்கொண்டு நிற்பான்.இவனின் வேலையானது சாதாரணமான வேலையாகத்தான் இருக்கும் ஆனால் தண்ணீர் இல்லாமல் விளையாடுபவர்கள் தொடர்ந்து விளையாடவோ,சக்தியைப்பெறவோ இயலாது.எனலே தண்ணீரோடு நிற்கும் இப்பையனின் வேலையானது பொதுமக்களுக்கு முக்கியமானதாக தெரியாவிட்டாலும் விளையாடும் குழுவில் இவனும் ஒருவன்.
நாம் தேவனை ஏற்றுக்கொள்ளும்போது நாமும் தேவனில் ஒருவராக மாறுகின்றோம்.தேவனை மகிழ்விக்கும் வழியில் நாம் தேவனால் செயல்படுகின்றோம்.நாம் செய்யும் வேலை மற்றவர்களை கவரக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம்.ஆலயங்களில் உணவு உண்டபின்பு நாம் அவ்விடத்தை தூய்மை செய்யலாம் அல்லது உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு நற்சுகம் பெற வாழ்த்து அடை வழங்களாம் என்ன வேலையாக இருந்தாலும் தேவனில் ஒன்றாக இருக்கும் எனக்கு நான் செய்யும் வேலைகள் மிகவும் முக்கியமானது.தேவனின் திட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொருவரும் ஆலயத்தில் திருவிழாக்கொண்டாட்டத்திற்காக தங்களின் பணிகளை செய்யும்போது தேவன் அவருக்கு நம்மை எங்கு வைக்க வேண்டும் என்று நினைக்கின்றாறோ அங்கு அழைத்துள்ளார் எனவே நாம் தேவனுக்கு நன்றி கூற வேண்டும்.
செபம்
அன்பு தேவனே நீர் என்னை எங்கு அழைக்கின்றீர் என்பதை நான் உணர்ந்துக்கொள்ளவும் உம்முடைய வேலையை நான் நன்றாகச்செய்ய எனக்கு கிருபை செய்யும்.ஆமென்.
ஆசிர்வாதம்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
No comments:
Post a Comment