TODAY’S DEVOTIONAL VERSE PROVERBS 18:12 -
அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. Pro 18:12
1. அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்
• அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; Pro. 11:2
• அழிவுக்கு முன்னானது அகந்தை; Pro. 16:18
• விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. Pro. 16:18
• மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும் Pro.29:23
EXAMPLE: HEROD: ACTS 12: 21-23
குறித்தநாளிலே ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.
அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
THE PROBLEM OF DEVIL 1TIM 3:6
அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.
2. மேன்மைக்கு முன்னானது தாழ்மை
• தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு Pro. 11:2
• மேன்மைக்கு முன்னானது தாழ்மை. Pro15:33
• மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான். Pro.29:23
EXAMPLE: JOB. JOB 42:1,2,6,10,12
அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.
யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க்கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.
WORDS OF CHRIST: LUKE 14:11
தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
WORDS OF APOSTLE: 1 PETER 5:5-7
அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். (JAMES 4:6)
ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்
No comments:
Post a Comment