"மேய்ப்பனின் குரல்"
என் முன்னே அமைதலாயிரு
நான் பேசும் போது அமைதலாயிருந்து ,என் வார்த்தைகளை தியானித்திடு. உன் வார்த்தைகள் சுருக்கமாய் இருக்கட்டும். என் சமுகத்தில் பதறிப் பேசாதே. நான் உன் ஜெபத்தின் வார்த்தைகளை மிகவும் நேசிக்கவும், உன் உள்ளத்தின் தன்மையைக் கருத்தோடு கவனித்திடவும் செய்யும் அதே நேரத்தில் நீ என் வார்த்தைகளைக் கவனமாய்க் கேட்கும்படியாகக் கட்டளையிடவும் செய்கிறேன். நான் பேசும் பொழுது என் சத்தத்தைப் புறக்கணித்துத் தள்ளாதே . வேறு பல குரல்கள் உன் கவனத்தை ஈர்த்து, என்னிடத்திலிருந்து உன்னைத் தூரத் தள்ளிக் கொண்டு போய் விட உன்னிடம் கெஞ்சி, கொஞ்சி ,மன்றாடிடும். ஆனால் நீயோ என்னைக் கவனித்து எனக்குக் கீழ்படிய வேண்டுமென விரும்புகிறேன். இது சீரான ஒழுக்கக் கட்டுப்பாட்டினால் மட்டுமே சாத்தியமாகும். எனவே, நீ ஜெபிக்கையில், உன் ஜெபத்திற்கான என்னுடைய மறு உத்தரவு என்ன என்பதைக் குறித்து அறிந்து கொள்ளக் கவனமாயிருந்து உன் இருதயத்தை அவ்வாறே பழக்குவித்துக் கொள். என் வார்த்தைகள் ஜீவனைத் தருகின்றன. நீ அவைகளுக்குக் கீழ்ப்படிகையில், மெய்யாகவே நீதிமானாக மாறிடுவாய்..
No comments:
Post a Comment