Friday 27 November 2015

தன்னைத்தானே சோதித்தறிதல்

தியானம்:"தன்னைத்தானே சோதித்தறிதல்"
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே,
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
சங்கீதம் 139:23  தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
139:24  வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
கண்ணாடி மற்றும் கண்ணாடிப் பொருட்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு, மக்கள் தங்களை கண்ணாடியில் பார்ப்பது மிகக்குறைவு. சில நேரங்களில’ ஆறுகள், ஏரி,குளம், நீரோடைகள் அவற்றில் தங்களின் முகங்களையோ, தங்களையோ பார்ப்பதுண்டு. கண்ணாடி கண்டு பிடித்தபின்பு இவை முழுவதுமாக மாற்றபட்டுவிட்டது
ஆனால் கேமரா கண்டு பிடித்த பின்பு அது மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது, புதுவிதமான வழிகளில் மக்கள் தங்களை படம் பிடித்துக் கொள்கின்றனர்.இவைகள் இருந்தபோதிலும் நாம் நம்மை பற்றிய ஒரு கற்பனையை, ஒரு உருவத்தை  வாழ்க்கை முழுவதும் நம் உள்ளத்தில் வைத்திருக்கின்றோம். இவைகள் நம்மைப்பற்றிய படங்களை வைத்துக்கொள்ளவும் நம் குடும்பத்தின் வரலாற்றைக் குறித்துக் கொள்வதற்கும் மிகவும் தேவையான ஒன்று. ஆனால் இது சில நேரங்களில் நம்முடைய ஆன்மீக வாழ்க்கையை அழிக்கக்கூடிதாக மாறுகின்றது. புகைப்படங்கனில் நம்முடைய வெளித் தோற்றங்களை கண்டு சந்தோஷம் அடையலாம் ஆனால் நம் ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி ஆராய்வதிலிருந்து நம்மை மறக்கச் செய்கிறது.ஆன்மீக வாழ்க்கையில் தன்னை பரிசோதித்தல் என்பது மிகவும் தேவையான ஒன்று. நம் வாழக்கையை சோதித்தரிந்து, பாவ வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, வாழ தேவன் விரும்புகிறார். 
நம்மையும் நம் வாழ்க்கையையும் சோதித்தரியாது நாம் தேவனின் கடைசி இராபோஜன உணவில் பங்கு பெற இயலாது.
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து இந்த அப்பத்தில் புசித்து இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். (1கொரி.11:28) ஆன்ம சோதனை என்பது தேவனோடு நாம் நல்லுரவு வைத்துக் கெதள்வதற்காக மட்டும் அல்ல. நம்மோடு உள்ள அனைவருடனும்  நல்லுரவை வைத்துக் கொள்வதும் ஆகும். இராவுணவு என்பது தேவனின் உடலின் நினைவுச் சின்னமாகும். நாம் மற்றவர்களோடு சமாதானமாக நல்லுரவு கொள்ளாத நிலையில் நாம் இந்த திரு விருந்தில் பங்கு பெற இயலாது.நம்முடைய பாவங்களை உணர்ந்து,ஏற்றக்கொண்டு அதை தேவனிடம் அறிக்கையிடுவதால் நாம் தேவனுடனும்,மற்றவர்களுடனும் நல்லரவை வளர்த்துக்கொள்ளச் செய்கிறது.
ஜெபம் 
அன்பு ஆணடவரே, நான் என் வெளி தூய்மைக்கும், அழகிற்கும் முக்கியத்துவம் கொடுக்காது என் இதய தூய்மையிலும்,அழகிலும் அதிக கவணம் செலுத்த கிருபை செய்தருளும். உமது ஆவியினால் என்னை மாற்றியருளும். 
தேவனின்  வார்த்தையில் நம்மை நாம் காணும்போது நாம் நம்மைத் தெளிவாக காணலாம். 

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord