Friday, 27 November 2015

வாழ்வு தரும் வார்த்தைகளைப்பேச வேண்டும்

"மேய்ப்பனின் குரல்"
"வாழ்வு தரும் வார்த்தைகளைப்பேச வேண்டும்"
எனக்கு  அன்பானவர்களே! என் ஒவ்வொரு வார்த்தைகளும் புனிதமானவை. எப்போதும் என் வார்த்தைகள் உன்னை என்னிடம் அழைத்து வரும், அவை உனக்கு வாழ்வும்,மீட்பும் தருபவை. என் வார்த்தைகள் ஒருபோதும் பலந்தராமல் என்னிடம் திரும்பி வருவதில்லை. என் அன்பு குழந்தாய்,இன்று நான் உனக்கு கட்டளையிடுவது என்னவெண்றால்  நீ கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒருபோதும் பயன் தராது உன்னிடம் திரும்பி விடக்கூடாது என்பதே. 
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களுக்கு வாழ்க்கை தரும் வார்த்தையாக இருக்க வேண்டும்,அவைகள் என் அருள் நிறைந்த வார்த்தைகளாக இருக்க வேண்டும். நீ தூய ஆவியில் வாழ்ந்து என் இதயத்தை மற்றவர்களோடு பகிரவேண்டும் அப்போதுதான் உன் உறவானது உண்மையான உறவாக இருக்கும். நான் உன் வார்த்தைகளை கொண்டு உன்னை தீர்ப்பிட்டால் உன் வார்த்தைகள் எப்படிபட்ட வார்த்தைகளாக இருக்கும்? இதை உன் மனதில் கொண்டு அன்பான வார்த்தைகளை பேசு. 
நீ உன் சகோதரர்களை அன்பு செய்வாய் என்றால், நீ பேசும் ஒவ்வொரு வார்த்தைகளின் மூலமாக அவர்களை என்னிடம் கொண்டுவருவாய் ஏனெனில் நானே வாழ்வு தரும் தேவன். என் வார்த்தைகளை உன்னில் கொண்டு நீ என்னில் வளரவேண்டும். உன் உதடுகள் தூய்மையானதாகவும்,உன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தேவனின் வார்த்தைகளாகவும் இருக்கட்டும்.உன் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் உன் இதயத்தில் இருந்து வருபவைகள். உன் உதடுகளை புனிதமாக, தூய்மையாக வைத்துக் கொண்டால் உன் உள்ளம் தூய்மையானதாக இருக்கும். தூய ஆவியில் நிலைத்திரு நீ என்ன செய்யவேண்டும் என்ன பேசவேண்டும் என்று அவர் உனக்கு கற்றுக்கொடுப்பார்.
ஏசாயா 55:11  அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord