Sunday 4 October 2015

God's grace

"தேவனின்  அருள்"
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது ஆகையால் பயப்படாதிருங்கள் அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். (லுக்.12:7)
தேவன் நம்மீதுக்ககொண்டுள்ள மிக கவனமான அருளை கீழ்கண்டவழிகளில் விளக்கியுள்ளார்.
1. தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டுகிறார்.
வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டுஇ அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். (யோ.10:3)
2.நம் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. 
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. (மத்.10:30)
3.தேவன் என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார்.
அவர் என் வழிகளைப் பார்த்துஇ என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ? (யோபு.31:4)
4.நமது எண்ணங்களை பதிவு செய்கின்றார்.
அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. (மல்கி.3:16)
5.நமது கண்ணீரை துடைக்கின்றார்.
என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? (சங்.56:8)
6.நமது வலதுகையைப் பிடித்து நடக்கிறார்.
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதேஇ நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். (ஏசா. 41:13)
7.நமது குறைவையெல்லாம் நிறைவாக்குவார்.
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். (பிலிப்.4:19)

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord