Sunday 4 October 2015

Decisions

தீர்மானங்கள்...தீர்மானங்கள்...
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக் கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். (நீதிமொழிகள் 3:6).
  நீங்கள் முடிவெடுக்கும் விதத்தைக் குறித்து என்றாகிலும் யோசித்ததுண்டா ?.அது உங்களது வீரத்தில் அல்லது மனதைரியத்தில் எடுக்கப்படட்டும் அல்லது உங்களது தேர்வுகளைக் குறித்ததான கடுமையான ஆய்வின் பேரில் எடுக்கப்படட்டும். உங்களது பாதையைத் தீர்மானிக்கிறதற்கான காரணி எது ?..உங்களது முடிவெடுக்கும் செயலைக் குறித்து நீங்கள் மெய்யாகவே சோதிக்கத் துவங்குகையில், உண்மையில் உங்களை இயக்கும் அந்த காரணி என்பதைக் கண்டுகொண்டு வியப்படைவீர்கள். அது ஒருவேளை எதிர்மறையான விளைவுகளைத் தவிர்ப்பதாயிருக்கலாம், அல்லது மற்றவர்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்பதையடுத்ததாயிருக்கலாம் ..அந்த க்ஷணத்தில் உங்களுக்கு சிறந்ததைத் தோன்றுகிற எதையும் நாடுவீர்கள் அல்லது வெறுமனே உங்களை வேதனையிலிருந்து தப்புவித்துக் கொள்ளவேண்டுமென்று ஆர்வம் காட்டுவீர்கள். இப்படி..உங்களது தீர்மானத்தின் காரணி எதுவாயினும், உங்களது தேர்வுகளின் திசைகாட்டியாக தேவன் தாமே இராத பட்சத்தில், உங்களது முடிவெடுக்கும் திறன்கள் தவறானவையே .
அவர் மாத்திரமே, எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அறிந்தவர். மேலும் நீங்கள் அறிந்திராத பல விருப்பத்தெரிவுகளை அவரே உங்களுக்குத் தருவார். எனவே இன்று எடுக்கக்கூடிய ஒரு தீர்மானம் உண்டென்றால்,அவரின் வழிகாட்டுதலை நாடுங்கள். அவரின் ஞானத்தையே சார்ந்துகொள்ளுங்கள். ஏனென்றால், அவர் உங்களை ஒருபோதும் வழிதவறிப் போக விடமாட்டார். 
ஜெபம்:
ஆண்டவரே, என் தீர்மானங்களில், உம்முடைய வழிநடத்துதலுக்காய் நன்றி. உம்முடைய ஞானம் பூரனமானதென்று அறிவேன். நீர் எதைச் செய்யும்படி என்னை வழிநடத்தினாலும், அதைச் செய்து முடிப்பதற்காய் என்னைத் தகுதிப்படுத்தவும் செய்வீர். அவர் சமூகத்தில் ஆழ்ந்து யோசித்திடுங்கள். .
அவர் உங்களை வழிநடத்தும்படி அவர் மேல் நம்பிக்கையாயிருங்கள்.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord