Saturday 3 October 2015

Holiness unto the Lord

வேதபாடம் :"கர்த்தருக்குப் பரிசுத்தம்"
பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் பசும்பொன்னினாலே பண்ணி கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாக வெட்டிஇ (யாத்.39:30)”
வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் புனிதம்.
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். (1பேதுரு.1:15) 
பரிசுத்தவான் ஒருவர் செபித்தார் இறைவா! உமது குழந்தையாகிய என்னை புனிதமாக மாற்றும். இந்த செபம் செபிக்கும் அணைவருக்கும் செபமாக அமைந்தது. நாம் கீழ்கண்டவற்றிர்க்காக சிறப்பான முறையில் செபிக்கின்றோம்.
1.உடலில் புனிதம். 
தேவனால் நாம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக நம் உடலை தூய்மைப்படுத்துதல்.
அப்படியிருக்க சகோதரரே நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்றுஇ தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. (ரோம.12:1)
2.செபத்தில் தூய்மை. 
நம் புனித கரங்களை உயர்த்த தூண்டும்.
அன்றியும புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்த
எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன். (1திமோ.2:8)
3.ஆராதிப்பதில் தூய்மை. 
குருத்துவத்திற்கு அழைகக்கப்படும் தேவனின் விசுவாசிகள்.
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும,இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். (1பேதூ.2:5)
4.குடிமையில் புனிதம் . 
நாம் பெயர் வைத்த புனித நாடு.
நீங்களோ உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும பரிசுத்த ஜாதியாயும அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். (1பேது.2:9)
5.எண்ணங்களில் புனிதம்.
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.
6.தொழிலில் புனிதம்.
அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.
அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்துஇ அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை. (சகரி.14:20,27)
7.இதயத்தில் புனிதம். 
இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக. (1தெசலோ.3:13)

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord