Monday 5 October 2015

இயேசுவை நோக்கிப் பொறுமையோடு ஓடக்கடவோமாக.

"இயேசுவை நோக்கிப் பொறுமையோடு ஓடக்கடவோமாக."

             ஒரு பட்டுப்புழு தன் பட்டு நூலைக்கொண்டு மிகவும் பொறுமையோடும்,கவனத்தோடும் கூடு கட்டிக்கொண்டு இருந்தது. அதைப்பார்த்த சிலந்தி தானும் தன் வலையைப்பின்ன ஆரம்பித்தது. சீக்கிரமாக பின்னி முடித்து விட்டது. ஆனால் பட்டுப்புழு நூலை சுற்றிச் சுற்றி பாடு பட்டுக்கொண்டு இருந்ததை பார்த்து சிலந்தி கேலி செய்தது. நான் எவ்வளவு சீக்கிரம் கட்டிவிட்டேன் பார்த்தாயா?
              பட்டுப்புழு அதற்கு ஆம் அது உண்மைதான் நீ எவ்வளவு சீக்கிரம் கட்டினாயோ அவ்வளவு சீக்கிரம் அது உடைபட்டுப்போய்விடும். மனிதர் உன்னை அழுக்கு என்று துடைத்துப்போட்டுவிடுவார்கள். உன் கூடு எந்த நெசவுக்கு பயன்படும்? ஆனால் என் நெசவுகளை ராஜா,ராணிகளுக்கு அழகிய ஆடையாக பயன்படுகிறது என்றது.
எவ்வளவு உண்மை பார்த்தீர்களா? 
                உலகப் பிரகாரமாக குறுக்கு வழியில் முன்னேற வேண்டுமானால் மிக சீக்கிரமாக முன்னேறிவிடலாம். ஆனால் அவைகள் என்றென்றைக்கும் நிலைத்திருப்பதில்லை.ஆவிக்குரிய ஜீவியத்தை கட்டி எழுப்புவதும் நித்திய ராஜ்ஜியத்திற்கு  பங்கு உள்ளவர்களாக மாறுவதும் எளியது அல்ல.
உபவாசம், செபம், பாவஅறிக்கை, வேததியானம், என்று நீங்கள் பொறுமையோடும் விடா முயற்சியோடும் உங்களது ஆவிக்குரிய வாழ்க்;கையைக் கட்டி எழுப்பும்போது அது நித்தியமான பலனைத்தருகிறது.     உங்கள் குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது. உலகம் ஒருவேளை உங்களை பரிகாசம் செய்யலாம்,புரிந்துக்கொள்ளாமல் இருக்கலாம் அதற்காக அதைரியப்படாதீர்கள், சோர்ந்து போகாதீர்கள.; உங்கள் அழைப்பு பெரியது நித்தியமானது.
வாக்குத்தத்தம:
1.ஆகையால மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க பாரமான யாவற்றையும நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்க நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு  அவமானத்தை எண்ணாமல்இ சிலுவையைச் சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.                      
                              (எபிரே.12:1-2)
2. நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம். 
                 (எபிரே.10:39)

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord