Friday 9 October 2015

Faith an illustration

விசுவாசம் விளக்கம்
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். 
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும் இவ்விதமாய் காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். (எபிரே 11:1-3)      
நோயின் முன் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய பென்சிலீனைக் கண்டுப்பிடித்த அலெக்சாண்டர் என்பர் தான் கண்டுபிடித்த பென்சிலீனை முதன் முதலில் பிரிட்டனில் பயன்படுத்தினார்.நோயில் இருந்து மக்களை பாதுகாப்பது பென்சிலீனின் பொறுப்பு,இவை இல்லாமல் அதிகமான மக்கள் பலவகையான நோயினால் இறந்தார்கள். கீழ்கண்ட மூன்று வகையான நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பென்சிலீனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
1.பென்சிலீன் இருக்கிறது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுதல்.
2.இந்த நோயை குனமாக்கும் என விசுவசித்தல்.
3.இந்த மருந்தை தவிர, வேறு எதுவும் என்னை குனப்படுத்த முடியாத என்று நம்புதல்.
4.உடலில் உள்ள பாக்டீரியாக்களை மெதுவாக கொல்லுவதற்கு இம்மருந்தை எடுத்துக்கொள்ளுதல்.
இந்த நம்பிக்கை இல்லை என்றால் இந்த மருந்தின் பயனை நான் பெறமுடியாது.பென்சிலீன் என்ற இந்த மருந்தை எடுத்துக்கொள்வதற்கே நமக்கு இவ்வளவு நம்பிக்கை தேவை என்றால்.விசுவாசம் கொள்கிறோம் என்றால் இதை விட அதிகமான விசுவாசம் தேவன் சிலுவையில் இறந்தது, தேவன் உயிர்பெற்றார் இவற்றை நாம் முழுமையாக நம்ப வேண்டும்.விசுவாசம் நம்மை தேவனோடு இனைக்கிறது அதன் வழியாக, தேவன் சிலுவையின் வழியாக, பெற்றுத்தந்த அருளை நம்மை பெறச்செய்கிறார்.
விசுவாசம் விடுதலையை அளிக்கிறது.
இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்                        (ரோம.5:1)
விசுவாசம் இரட்ச்சிப்பைக் கொடுக்கிறது.
கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்லஇ இது தேவனுடைய ஈவு; 
(எபிரே 2:8)  
விசுவாசம் பரிசுத்தமாக்குகிறது
அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும்இ பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாகஇ அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும்இ சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டுஇ இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். 
(அப்போ. 26:18)
வீசுவாசம் சுத்தப்படுத்துகிறது
விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கிஇ நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.                                 (அப்போ. 15:9

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord