Tuesday 6 October 2015

இன்றைய ஜெபம்: "பாவ எண்ணங்களில் இருந்து விடுதலை பெற செபம்

இன்றைய ஜெபம்: "பாவ எண்ணங்களில் இருந்து விடுதலை பெற செபம்"

பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மை துதிக்கிறேன, ஸ்தோத்தரிக்கிறேன்.அன்பு இரக்கம் நிறைந்த யேசுவே  உம்முடைய கிருபை நிறைந்த கரங்களில் என் வாழக்கையை ஒப்புவிக்கிறேன்.
சேனைகளின் கர்த்தர் தூயவர் தூயவர் என்று போற்றப்படுகிறவரே,பலவிதமான பாவ எண்ணங்களாலும் வேண்டாத நினைவுகளாலும் சமாதானம் இன்றி இருக்கும் என் மனதை விடுவிக்கும்படியாக செபிக்கின்றேன்.

விடுதலை அளிக்கும் இயேசுவே, எப்பொழுதும் அசுத்தமான பாவ எண்ணங்களால் தீய சக்திகளின் விளைவுகளால,; பரிசுத்தத்தை இழந்து  குற்றமனச்சாட்சியோடும், கண்ணீரோடும் வாழ்ந்து வரும் என்மேல்  தயவாய் மனம் இரங்கும். எனக்கு வரக்கூடிய எந்த எண்ணத்தையும்  கிறிஸ்துவுக்குள் சிறைப்படுத்த அடியேனுக்கு கிருபை தாரும். உம்முடைய தழும்புகளால் அடியேனை குணமாக்கும். நான் பரிசுத்தமாகும்படி உமக்கு விரோதமாய் செய்த எல்லா பாவங்களையும்,அக்கிரமங்களையும்,மீறுதல்களயும் கிருபையாய் மன்னியும்,உம்முடைய தூய இரத்தத்தால் என்னை கழுவி சுத்திகரியும். இயேசுவே எனக்குள் அசுத்தமான பாவ எண்ணங்களைத் தூண்டுகிற சாத்தானின் வல்லமைகள் என்னை விட்டு அகலட்டும்.என் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையம் உமது இரத்தக்கோட்டைக்குள் மூடிக்கொள்ளும.;
பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவே, எந்த பாவ எண்ணங்களும், தீய சக்திகளும் என்னை மேற் கொள்ளாதபடிக்கு அதனை ஜெயிக்க கிருபை தாரும். பரிசுத்தத்தை விரும்பும் இயேசுவே என் வாழ்வில் உம்மைப்போல பரிசுத்தமாய் வாழ கிருபை செய்யும். அடியேனை ஆசீர்வதித்து உயர்த்தும் ஆண்டவரே. நீர் என் செபத்தை கேட்டதற்காக உமக்கு நன்றி.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செபிக்கிறேன் வல்லமையுள்ள  நல்ல பிதாவே. ஆமென்

விசுவாச அறிக்கை:
தேவனேஇ சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்இ நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.                  
                                           (சங்.51:10)

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கிஇ நம்மைச் சுத்திகரிக்கும். (1யோவா.1:7)

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்                     (நீதி.28:13-14)


No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord