Tuesday 6 October 2015

தேவ செய்தி :"சமாதானமும் சுகமும்

தேவ செய்தி :"சமாதானமும் சுகமும்"
வாக்குத்தத்தம் : ‘உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.’ (சங்கீதம் 122:7)
ஜெபம் : இரக்கமுள்ள இயேசுவே! சமாதானத்தையும் சுகத்தையும் ஒவ்வொருவருக்கும் கிருபையாய் தருபவரே. உலகம் தரக்கூடாத சமாதானத்தை தருவேன் என்று வாக்கருளின நல்ல தெய்வமே, மேலான சமாதானத்தையும் சுகத்தையும் இந்நாளிலும் உம்முடைய தயவால் பெற்றுக்கொள்ள கிருபை செய்வீராக. ஆமென்!
நீங்கள் வாழ்கிற வீடு சிறியதாயிருந்தாலும், ஒருவேளை வாடகை வீடாய் இருந்தாலும், கர்த்தர் உங்களோடு வாசம் செய்தால் அங்கு சுகமும் சமாதானமும் தங்கியிருக்கும். தேவ சமாதானமும் அவர் அருளும் செழிப்பும் உங்கள் வீட்டில் நிறைந்திருக்க வேண்டுமானால், தேவ பிரசன்னத்தையும் பரிசுத்தத்தையும், கர்த்தருடைய வார்த்தையையும் நீங்கள் வாஞ்சிக்க வேண்டும். 
ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல, தேவாதி தேவனுக்கு இரண்டு பெரிய குணாதிசயங்கள் உண்டு. ஒன்று பரிசுத்தம் மற்றொன்று அன்பு. 
நீங்கள் பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ளும்போது, தேவ அன்பும் சமாதானமும், சுகமும் உங்கள் உள்ளத்தையும் இல்லத்தையும் நிரப்பும்.
தேவனோடுகூட சமாதானம். வீட்டாரோடுகூட சமாதானம். சபையோடுகூட சமாதானம். சமுதாயத்தோடும் சமாதானம். உங்களோடும் உங்களுக்குள்ளும் சமாதானம் இருக்கட்டும். சமாதான பிரபுவாகிய இயேசுதாமே பூரண சமாதானத்தைக் கட்டளையிடுவாராக!
பிலிப்பியர் 4:7 ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.’
யோவான் 14:27 ‘சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.’

ஜெபம் : அன்பின் இயேசுவே, அளவில்லாத உமது கிருபைகளுக்காக ஸ்தோத்திரம். அன்பையும் பரிசுத்தத்தையும் நேசிக்கிற நல்ல கடவுளே, என்னையும் இன்றுமுதல் உம்மைப்போல் மாற்றும். ஒவ்வொருநாளும் பரிசுத்தத்தையும் அன்பையும் காத்துக்கொள்ள தயை செய்யும். சமாதான ஆசீர்வாதத்தினால் என் உள்ளத்தை நிரப்பும். நீர் அப்படி செய்வதற்காய் உமக்கு நன்றி. உமக்கே மகிமையும் கனமும் உண்டாகட்டும். ஆமென்!  


No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord