Wednesday 30 September 2015

வாக்குத்தத்தச் செய்தி

வாக்குத்தத்தச் செய்தி
வாக்குத்தத்தம் - "கர்த்தரின் வெளிச்சம்"
யாக்கோபின் வம்சத்தாரேஇ கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள். (ஏசாயா:2:5) 
கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப்பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். (சங்:118:27)
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும்  இந்த புதிய மாதத்தின்; இனிய காலை வணக்கங்கள். இந்த தியான பகுதியின் வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சிக் கொள்கிறேன்.பரலோக தேவன்தாமே உங்களை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
ஜெபம் 
அன்பு இயேசுவே நீர் இந்த புதிய  மாதத்தை கானக்கொடுத்த கிருபைக்கு உமக்கு நன்றி.கடந்த ஒன்பது மாதகாலமும் நீர் எங்களை கண்ணின் மணிபோல பாதுகாத்தீர். உமக்கு மிக்க நன்றி;.இந்த புதிய மாதத்தில் உம்முடைய கிருபையும் வசனமும் உம்முடைய வழி நடத்தல்களும் எங்களை ஆசீர்வதிப்பதாக.ஆமென்.
கர்த்தரின் வெளிச்சம் என்றால் என்ன?
இந்த வசனத்தில் கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு விசேசித்த  அழைப்பினைக் கொடுக்கிறார்.அந்த அழைப்பு தான் கர்த்தரின் வெளிச்சம்.
கர்த்தரின் வெளிச்சம் என்பது பல ஆவிக்குரிய காரியங்களை விளக்கிக் காட்டுகிறது. அதில் ஒரு சில காரியங்களை செபத்துடன் தியானிப்போம்.
1.அன்பில் நடந்துகொள்ளுங்கள்:
கர்த்தருடைய அன்பில் நடந்துகொள்ளுங்கள்;.தேவன் அன்பாகவே இருக்கின்றார்.எங்கு தேவனின் அன்பு இருக்கின்றதோ அங்கு வாழ்க்கையும் ஜீவனும் இருக்கும். அன்பில்லாதவன் தேவனை அறியான் தேவன் அன்பாகவே இருக்கிறார். நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. (யோவா:4:8 10)
2.வார்த்தையின் படி நடந்துகொள்ளுங்கள்
கர்த்தருடைய வார்த்தையின் படி நடந்துகொள்ளுங்கள் தேவனின் வார்த்தை எங்குள்ளதோ அங்க இருளுக்கு இடம் இல்லை. 
சத்தியத்தையும் அறிவீர்கள சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவா:8:32).
தேவனின் வார்த்தை எங்கு இருக்கின்றதோ அங்கு விடுதலை இருக்கிறது.
3.ஞானமாய் நடந்துகொள்ளுங்கள்
ஞானமாய் நடந்துகொள்ள வேண்டும்.காரணம் அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. (கொலோ:2:3) 
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். (நீதி:2:6) 
இயேசுவே தேவனால் நமக்கு ஞானமும் மீட்பும் பரிசுத்தமும் ஆனார்.
செபம்:
எங்கள் அன்பின் ஆண்டவரே கடந்த ஒன்பது  மாதமும் எங்களை ஆச்சரியமா நடத்திநீர்.எங்களுடைய  தனிப்பட்ட வாழ்க்;கை குடும்பவாழ்க்கை சமுதாயவாழ்க்கை  ஆவிக்குரிய வாழ்க்கை இவைகளை நீர் ஆசீர்வதித்தீர்.
இந்த புதிய மாதத்தின் ஆசீர்வாதத்திற்காக உமது திருப்பாதம் வருகிறேன்.உம்முடைய அன்பினாலும்  சத்தியத்தினாலும் கிருபையினாலும் எங்களை வழி நடத்தும்.நாங்கள் நினைத்ததற்கும் மேலாக  நீர் எங்களை ஆசீர்வதிதத்தர்காய் நன்றி இயேசுவே. 
கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் செபிக்கின்றேன் வல்லமையுள்ள எங்கள் நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள்  அனைவரோடும் இருப்பதாக அவர் உங்கள் யாவரையும் சகலவித ஆசீர்வாதத்திலும் பலுகிப்பெருகப்பன்னுவாராகா.
விசுவாச அறிக்கை:
கர்த்தர் சொல்கிறார்
1.இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக தருகிறேன்; ஒருவனும் அதைப்பூட்டமாட்டான்.
2. உங்கள் வெட்கத்திற்க்குப் பதிலாக இரட்டிபான பலன் வரும்.
3.இதோ புதிய காரியத்தைச் செய்கிறேன்;.
4.உங்கள் எல்லைகளை விசாரமாக்கிடுவேன்.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord