Tuesday 8 September 2015

தாவீதைப் பற்றியும் , கர்த்தருடைய கிருபையைப் பற்றியும் சற்று அதிகமாக ..."

இன்றைய தியானம்..

"தாவீதைப்  பற்றியும் , கர்த்தருடைய கிருபையைப் பற்றியும் சற்று அதிகமாக ..."

தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். 

சங்கீதம் 36 :7

பழைய ஏற்பாட்டில் உள்ள  கிருபை என்ற வார்த்தையானது , புதிய ஏற்பாட்டின் கருணை என்கிற வார்த்தையைக் குறிக்கிற, நன்கறிந்த ஆவிக்குரிய உறவு முறையைக் கொண்டிருக்கும் வார்த்தையாகும். 

கிருபையானது கர்த்தர் தமது ஜனத்தின் மேல் கொண்டுள்ள  அதிக அக்கறையுள்ள அன்பைக் குறித்துப் பேசுகிறது . 

இந்த அன்பானது நாம் தகுதியுள்ளவர்களாய் இருக்கும் நியாயத் தீர்ப்பிலிருந்து நம்மைத் தப்புவிப்பதாகவும் , அதைப் போலவே  நம்முடைய தேவைகளை அள்ளி வழங்குகிற  அவரது நற்றன்மையாகவும் இருக்கிறது. 
கர்த்தருடைய கிருபை குறித்த தாவீதின் உள்ளத்தை அவர் கர்த்தரைப் போற்றும் விதத்தினின்றே அறியலாம்.
"கர்த்தாவே ! உமது கிருபை எத்தனை விலையேறப் பெற்றது! " . நாம் கண்ட 
இந்த வசனங்களில் தாவீது, தாம் கர்த்தருடைய  கிருபை ஏன் இந்த  அளவிற்கு  மதிக்கிறாரென்பதனை வெளிப்படுத்துகிறார்.அது  அவரது  தொலை தூரங் கடந்தும் நம்மை அடைகிற நோக்கமுடைய கிருபையின் அடிப்படையில் தொடர்புடையது . 
தாவீத அவரது  அளவு கடந்த கிருபையை வர்ணித்த பின்பு  தாவீது , இது எதனால் என்று கூறத் 
தொடங்குகிறார் .
" எனவே மனுபுத்திரர் உம்முடைய செட்டைகளின் நிழலில் தங்களின்  நம்பிக்கையை  வைப்பார்கள்" 
மக்கள்  கர்த்தரின் கிருபையைக் கண்டுணரும் கணத்தில் , அவர்கள் அதில் தங்களைப் பாதுகாக்க விரும்பும் அவரது  விருப்பமும்  அடங்கியிருப்பதை உணர்வார்கள் . இப்படியாக அவர்கள் விசுவாசத்தினால்  ஈர்க்கப்பட்டு, அவரது  கிருபையில் அடைக்கலமாகும்படி வருகிறார்கள் . 
" எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும், உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது, விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன் "
சங்கீதம் 57 :1 
குஞ்சுகளை அர்ப்பணிப்புடன்  காக்கும் தாய்ப் பறவையைப் போல் தேவன் , தம்மை  விசுவாசிக்கிறவர்களிடம்  தமது கிருபையை வெளிப்படுத்திகிறார். 
   ஏசு கிறிஸ்து இப்படிப் பட்ட நெருக்கமான  முறையில் மக்களைக் காக்க வேண்டுமென்ற தமது விருப்பத்தை , அவை எதிர்க்கப்படத் தக்கவையாக இருந்தபோதிலும் ,
"எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன், உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. லூக்கா 13 :34 
கர்த்தருடைய பாதுகாக்கும்  சிறகுகளுக்குள் கூட்டிச் சேர்த்துக் கொள்ளப்பட விரும்புகிறவர்களில் தாவீதும் ஒருவர் .
'' கண்மணியைப்போல என்னைக் காத்தருளும். 
என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும் " சங்கீதம் 17 : 8 /9 
கர்த்தருடைய கிருபைக்குள் அண்டிக் கொள்ளுகிறவர்களின் மகிழ்ச்சி எத்தகையது ?
"நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்". சங்கீதம் 63 :7 

ஜெபம்

"அன்பு தேவனே! பல முறை நான் உம்முடைய  கிருபையினிமித்தம் உம்மிடம்  வர முற்படாமல் இருந்திருக்கிற படியால்  என்னை மன்னியும் .நான் புறக்கணித்த, ஒரு வேளை மறுத்த  அந்தத் தருணங்களுக்காக வருந்துகிறேன். உமது பாதுகாக்கும் அக்கறையில் பணிவாய்  என்னுடைய நம்பிக்கையை வைக்கிறேன். நான்  எத்தனை அறிவிலியாய் இருந்திருக்கிறேன். 

கர்த்தாவே நான் ஒவ்வொரு முறையும் உம்மிடத்தில் வரும் பொழுதிலும் , முடிவில் மகிழ்ச்சி என் உள்ளத்தை நிரப்பிற்று.தயை கூர்ந்து என்னில் உம்முடைய விலையேறப் பெற்ற கிருபையையே வழக்கமாய்ச் சார்ந்திருக்கும் இதயத்தைத் தோற்றுவிப்பீராக !
ஆமேன் !


No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord