செபம்
எதிர்காலத்தை குறித்த பயத்திலிருந்து விடுதலைப்பெற செபம்
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே உம்மை முழு மனதுடன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் மகிமை நிறைந்த இயேசுவே உம்முடைய அன்பின் கரங்களில் என் வாழ்கை முழுவதையும் அர்பணிக்கிறேன் என் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று ஏங்கும் என் சூழ்நிலையை கண்ணோக்கி பாரும் இயேசுவே என் வாழ்வில் காணப்படும் கவலை பயம் கலக்கம் குழப்பம் போரட்டம் இதில் இருந்து என்னை விடுவித்தருளும்.இருளை வெளிச்சமாக்குகின்ற கர்த்தாவே நீர் என்னை ஆசீர்வதித்து என் எதிர்காலத்தை ஒளிமயமாக மாற்றும்.
பாவங்களை மன்னிக்கின்ற இயேசுவே நீர் என்வாழ்கையை ஆசீர்வதிக்ககூடாதபடி தடைகளாக உள்ள பாவங்ளை தயவாய் மன்னியும் சாபங்களை நீக்கியருளும் உமது இரத்ததால் முற்றிலும் கழுவி என்னை பரிசுத்தப்படுத்தும் பெலப்படுத்துகின்ற கிற்ஸ்துவே இவ்வுலகில் வாழ நம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தருளும்.உம்மேல் என் மனபாறங்களை வைத்துவிட உதவி செய்யும் நீர் எப்பொழுதும் துனையாக இருக்கின்றீர் என்பதை அறிந்திட எனக்கு கிருபை தாரும் சமாதனதுடன் மமிழ்சியுடன் வாழவும் நீர் என்எதிர்காலத்தில் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களைப்பெறவும் தகுதிப்படுத்தும்.இயேசுவே நீர் என் செபத்தை கேட்பதற்காக உமக்கு நன்றி.
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் செபிக்கின்றேன் அன்பின் பிதாவே ஆமென்.
வாக்குத்தத்தம் - விசுவாச அறிக்கை
- ஏற்றக்காவத்திலே இயேசு என்னை உயர்த்தவார்
- இயேசுவுக்கு பயப்பிடுகிற நான் ஆசீர்வதிக்கப்படுவேன்
- இயேசுவை நம்புகிற நான் உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவேன்
- என் காலங்கள் இயேசுவின் கரத்தில் உள்ளது
No comments:
Post a Comment