Sunday 13 September 2015

நலிந்தோருக்கு எசாயா இறைவாக்கினர் எடுத்துரைக்கும் தேவனின் அருள்

"நலிந்தோருக்கு எசாயா  இறைவாக்கினர் எடுத்துரைக்கும் தேவனின் அருள்"
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.
இந்த தியான பகுதியின் வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்சிக்கொள்கிறேன்.பரலோக தேவன்தாமே உங்களை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
Isaiah 40: 29 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். 30 இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். 31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
பழையஏற்பாட்டில் எசாயா இறைவன் அருளாள் வாழ்ந்தார் என்பது ஒரு சிறந்த எடுத்தக்காட்டு(தேவனை பற்றிக்கொண்டு மக்களின் வாழ்கையில் மக்களுக்காக உழைத்தார்) நலிந்தோருக்கு எசாயா  இறைவாக்கினர் எடுத்துரைக்கும் தேவனின் அருள்  ஏசாயாவின் இறைபற்றானது வெளிப்படுத்தப்பட்டது.
தேவன் தன் அருளை சக்தியை நலிந்தோருக்கு ஆசிக்கிறார் ஆனால் இவ்வுலகை சார்ந்தவர்கள் தேவனின் அருளை உனர்வது இல்லை அவரின் அருளில் பங்குகொள்வது இல்லை காரணம் இவ்வுலகை சார்ந்தவர்கள் தேவனின் பரலோக இராஐpயத்தின் அருளைப்பற்றி தெரிவதும் உனர்வதும் இல்லை.அதிகபடியான மக்கள் தங்களின் பலவீனங்களை ஒப்புக்கொள்ளாததால் தேவனின் கிருபையை சக்தியை இழந்துவிடுகின்றனர்.பாக்கிவான்கள் தாங்கள் பலவீனர்கள் என்பதை ஒப்புக்கொள்வதால் தேவனின் மிகப்பெரும் கிருபைகளை நிறைவாகப்பெறுகின்றனர்.எவன் ஒருவன் பெலன் அற்றவனாக இருக்கின்றானோ அவனை தேவன் பெலப்படுத்துகிறார்.
இளையோர் தன் இளமைக்காலத்தில் தன் சக்தியை நம்பி வாழ்கின்றனர் இருந்தபோதிலும் அவனின் உலகசக்தி நிறைவாழ்விற்கு நித்திய வாழ்விற்கு தேவையான சக்தியை தருவது இல்லை.இளையோர் வாழ்வில் தடுமாறலாம் சக்தியை இழக்கலாம் ஆனால் தேவனின் வல்லமை  அருன் ஒன்று மட்டுமே இளயோரை வாழவைக்கும். 
தேவனை நம்பி தேவனை பிடித்துக்கொள்பவர்களால் மட்டும்தான் தேவனின் அருளை அனுபவிக்க தகுதியாகிறான் பாக்கியவான் ஆகிறான் தன் சக்தியை நம்பி பற்றி வாழும் இளையோரும் முதியோரும் தன் சக்தியை இழந்துவிடுவர்.ஆனால் தேவனை நம்பி உள்ளவர்களின் சக்தி அருனன் திடப்படுத்தப்படுவர் ஊட்டமூட்டப்படுவர் தேவனிடத்தில் தன் நம்பிக்கையை வைப்பனின்  தேவனால் திடப்படுத்தப்படுவான்.தேவனின் நம்பிக்கை வைப்பவர் தன் வாழ்வின் எந்ந நிலையிலும் வாழமுடியும். எவன் ஒருவன் எந்தநிலையிலும் இறைவனைப் பற்றிக்கொள்கிறானோ அவனை தேவன் இறைவன் தன் அருளால் நிறப்பி தன் சக்தியால் நிறப்புவார் அவர்கள் ஓடுவார்கள் ஆனனல் சக்தி இழக்கமாட்டார்கள் நடப்பார்கள் ஆனால் தலர்ந்துவிட மாட்டார்கள.
ஜெபம்
ஜீவனுள்ள தேவனே எல்லா  அருளும் நிரம்பப்பெற்றவரே  என்வாழ்கையில் பல நிலைகளில் என் சக்தியை நம்பி இருந்நிருக்கின்றேன் ஆனால அவைகள் பலன் இல்லாதவைகள் என்பதை உணர்ந்துக்கொண்டேன்.அன்பின் தேவனே உம்மைப்பற்றிக்கொள்ள என் நம்பிக்கையை உம்மீது வைக்க கற்றுத்தாரும் அப்பா நான் ஏங்கும் உம் அருனால் என்னை நிறப்பும்.உன் சக்தி நிறைந்த நாமத்தில் செபிக்கின்றேன் ஆமென்


No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord