Tuesday 30 June 2015

The Prayer life of Jesus

தியானம் :"இயேசு கிறிஸ்துவின் ஜெப வாழ்க்கை."
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
1.இயேசு கிறிஸ்துவின் காலை ஜெபம்.
மாற்கு : அதிகாரம் 1 : 35 
 அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
2. இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நான ஜெபம்.
லூக்கா : அதிகாரம் 3 : 21 
 ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;
3. இயேசு கிறிஸ்துவின் இரவு ஜெபம்.
லூக்கா : அதிகாரம் 6 : 12 
 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
4. இயேசு கிறிஸ்துவின் தனி ஜெபம்.
லூக்கா : அதிகாரம் 5 : 16 
 அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
5. இயேசு கிறிஸ்துவின் கூட்டு ஜெபம்.
லூக்கா : அதிகாரம் 9 : 28 
 இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.
6. இயேசு கிறிஸ்துவின் சோதனையின் ஜெபம்.
லூக்கா : அதிகாரம் 22 : 42 
 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
7, இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் ஜெபம்.
லூக்கா : அதிகாரம் 23 : 34 
 அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord