Monday, 15 July 2019

இன்றைய தியானம் :"கர்த்தர் நிறைவேற்றுவார்"

இன்றைய தியானம் :"கர்த்தர் நிறைவேற்றுவார்"


தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 

பரலோகத்தின் தேவன் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் அபரிவிதமாக ஆசீர்வதிப்பாராக.


எரேமியா 29:11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.


 1. குறித்திருக்கிறதை நிறைவேற்றுவார்.

யோபு 23:14  எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.


 2. நீதியோடே நிறைவேற்றுவார்.

ரோமர் 9:28  அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.


 3. வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றுவார்.

சங்கீதம் 20:5 நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.


 4. ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவார்.

சங்கீதம் 20:4 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.


 5. நல் வார்த்தைகளை எல்லாம் நிறைவேற்றுவார் 

எரேமியா 33:14 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.


கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக.




No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord