வாலிபப் பிள்ளைகளின் ஜெபம்!
எங்களை அன்பாய் நேசிக்கிற பரலோகப் பிதாவே! உம்மை துதிக்கிறேன்! ஸ்தோத்தரிக்கிறேன்!
இயேசுவே! இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறேன்.
நீர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும், உதவிகளுக்காகவும் உமக்கு
நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே! எனக்கு நீர் கொடுத்த நல்ல பெற்றோருக்காக,
நல்ல சகோதர சகோதரிகளுக்காக உமக்கு நன்றி!
இயேசுவே! உம்முடைய திருக்கரங்களில் என்னை முழுவதுமாக ஒப்படைக்கிறேன்.
இந்த நாள் முழுவதும் நீர் என்னைக் கைவிடாமல் கரம்பிடித்து வழி நடத்தும்.
நான் பாவத்திற்கு விலகி, பரிசுத்தமாக வாழ எனக்கு உதவி செய்யும். என்
வாயின் வார்த்தைகளும் என் இருதயத்தின தியானமும் உமது சமூகத்தில்
பிரியமாய் இருக்கட்டும்.
இயேசுவே! உம்முடைய வேத வசனத்திற்குச் கீழ்ப்படிந்து சாட்சியாக வாழ எனக்கு
உதவி செய்யும். உமக்குப் பிரியமான மகனாக, மகளாக வாழ என்னை வழி நடத்தும்.
என் படிப்பிற்கு வேலைக்கு வேண்டிய ஞானத்தையும், அறிவையும்
எனக்குத்தாரும். நீர் என்னை ஆசீர்வதித்து உயர்த்தும்படியாக வேண்டுகிறேன்.
இயேசுவே! நீர் என் பிரார்த்தனையை கேட்டதற்காக உமக்கு நன்றி. இயேசு
கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், அன்பின் பரம
பிதாவே. ஆமென்!
‘வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி
தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே’ (சங்கீதம் 119:9)

No comments:
Post a Comment