தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர் (சங்.18:28).
என் ஆன்மா இருளில் அமர்ந்திருக்கலாம். இது ஆவிக்குரியதாய் இருந்தால் மனிதரின் ஆற்றல் எனக்கு வெளிச்சம் அளிக்க முடியாது. கடவுள் துதிக்கப்படுவாராக! அவர் என் இருளை வெளிச்சமாக்கி உடனே என் விளக்கை ஏற்றக்கூடியவர். நான் உணரக்கூடிய இருளினால் சூழப்பட்டிருந்தாலும் அவர் இருளை நீக்கி உடனே என்னைச் சுற்றிலும் ஒளிமயமாக்கக் கூடியவர்.
அவர் இரக்கம் எப்படிப்பட்டதென்றால் அவர் ஏற்றும் விளக்கை யாரும் அணைக்க முடியாது. எண்ணெய் இல்லாததால் அது தானாகவே அணைந்து போகாது. அதிகநேரம் ஆனதால் எரிந்து போயும் விடாது. படைப்பின் போது ஒளிதர ஏற்றியவை இன்றும் பிரகாதசித்துக் கொண்டிருக்கின்றன. ஆண்டவரின் விளக்குகள் தூண்டப்பட வேண்டியதாயிருக்கலாம். ஆனால் அவர் அவைகளை அணைத்து விடுவதில்லை.
ஆகையால் நான் நைட்டிங்கேல் பறவையைப்போல இரவிலே பாடுவேனாக! எதிர்பார்ப்பு எனக்கு இசை அமைத்துக் கொடுக்கும். நம்பிக்கை சுதியெடுத்துக் கொடுக்கும். கடவுள் ஏற்றிய விளக்கினால் சீக்கிரத்தில் நான் மகிழ்ச்சி அடைவேன். இப்பொழுது நான் ஊக்கமற்றவனாகவும் தூயரார்ந்தவனாயும் இருக்கிறேன். ஒருவேளை வானிலையினால் அல்லது திடீரென்று ஏற்பட்ட தொல்லையினால் அப்படி இருக்கலாம். ஆனால் எக்காரணத்தினால் இருள் ஏற்பட்டாலும் கடவுள் ஒருவரே வெளிச்சம் கொண்டுவர முடியும். நான் அவரையே நோக்கியிருக்கிறேன். சீக்கிரம் என்னைச் சுற்றிலும் வெளிச்சம் கொடுக்கக் கூடிய ஆண்டவரின் விளக்குகள் ஏற்றப்படும். அதற்குப்பின் அவர் குறித்துள்ள காலத்தில் விளக்காவது சூரியனின் ஒளியாவது தேவைப்படாத இடத்தில் நான் இருப்பேன். அல்லேலூயா!
BY CHS
No comments:
Post a Comment