"கர்த்தருடைய சீர்ப்படுத்தும் பணியின் விலையேறப் பெற்ற வாக்குறுதி "
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் சங்கீதம் 138 :8
மீண்டும் நாம் கர்த்தரின் " விலையேறப் பெற்ற வாக்குறுதிகளை நோக்கிப் பார்க்கலாம் .
2 பேதுரு 1 : 4 இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் காரியம் , கர்த்தரை அறிந்து , பணிவுடன் அவரையே சார்ந்து வாழ்கின்றவர்களின் வாழ்வில் கர்த்தர் நிகழ்த்தும் சீர்ப்படுத்தும் காரியங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறது.
இந்த விலையேறப் பெற்ற வாக்குத்தத்தமே பழைய ஏற்பாட்டின் வாக்குத்தத்தமும் , நாம் பிலிப்பியர் 1: 6 வசனத்தின் முந்தைய வாக்குத்தத்தமுமாய் இருக்கிறது .
" உன்னில் நல்ல ? காரியத்தைத் துவக்கி வைத்தவரே அதை நிறைவேற்றுவார் ".
இந்நாளில் நமக்குள்ள வாக்குத் தத்தத்தின் திகைக்க வைக்கும் தொடர்பினை எண்ணிப்பார்.
" என்னோடு தொடர்புடையவற்றைக் கர்த்தர் சீர்ப்படுத்துவார் "
நம் வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒவ்வொரு காரியத்திலும் அவர் தமது சித்தத்தையும் , திட்டத்தையும் முழுமையாய் நிறைவேற்றுவதாய் நம்முடைய ஆண்டவர் உறுதிளித்திருக்கிறார் .
அது விவிலிய உள்ளுணர்வின் வளர்ச்சியாக இருந்தாலும் , தேவத்தன்மையில் மேம்படுவதாக இருந்தாலும் , திருமண காரியத்தில் முன்னேற்றமாக இருந்தாலும் , அல்லது வேறு எதுவாகவோ இருந்த போதிலும் ,
"நம்மோடு தொடர்புடையவற்றைக் கர்த்தர் சீர்ப்படுத்துவார் ".
கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் சிறிதளவே செவி சாய்த்திருந்தாலும் கூட , நாம் பெரிய அளவில் விவிலிய அறிவில் நாம் வளர அவர் விரும்புகிறாரென்பதை அறிந்து கொள்ளலாம் .
காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல,
பாலை உண்ணத் தக்கவர்களானீர்கள். எபிரேயர் 5 :12
நாம் கர்த்தருடைய வார்த்தையைப் பணிவாய்ப் புசித்து , ஆவிக்குரிய உள் நோக்குதலுக்காக அவரைத் தேடினால், அவர் இந்தப் பகுதியில் "நம்மோடு தொடர்புடையவற்றை சீர்ப்படுத்துவார் ".
நம்முடைய முழுமையான ஆவிக்குரிய வளர்ச்சிக்கான கர்த்தரின் சித்தத்தில் கவனமாயிருந்தால் , அவருடைய வார்த்தை நம்மை தெய்வீகத் தன்மைக்கு அழைப்பதை அறியலாம் .
"ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, தீத்து 2 :11
நாம் அவபக்தியையும் லௌகிகஇச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் ஜீவனம்பண்ணி "
தீத்து 2 :12
நாம் கர்த்தரைத் தேடி, அவரையே நம்பி , தெய்வத்தன்மையில் மென்மேலும் வளர்ந்து கொண்டிருந்தால் அவர் இந்தப் பகுதியில் "நம்மோடு தொடர்புடையவற்றை சீர்ப்படுத்துவார் ".
குடும்ப வாழ்க்கைக்கு மதிப்பு அளிக்கும்படி , வசனம் , நாம் குடும்பத்தில் பரஸ்பர பணியாட்களாக இருக்கும் படியாக , கர்த்தர் மகிமைப் படும்பட ஒருவருக்கொருவர் பணி விடை செய்து வாழும்படி கர்த்தருடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறது .
"கர்த்தருக்கு பயந்து ஒரு வருக்கொருவர் கீழ்ப்படிந்து இருங்கள் "
எபேசியர் 5 - 21 .
பணியாளாகிய மனைவி , கணவனின் ஆவிக்குரிய தலைமை தாங்குதலைப் பின்பற்ற வேண்டும்.
"மனைவி மார்களே ! கர்த்தருக்குக் கீழ்ப்படிவது போல் உங்கள் சொந்தப் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்"
எபேசியர் 5 - 22.
பணியாளாகிய கணவன் , கிறிஸ்துவின் தியாக அன்போடு தன் மனைவியை நேசிக்க வேண்டும் .
"கணவன் மார்களே !
கிறிஸ்து , சபையை நேசித்து , அதற்காகத் தம்மையே கொடுத்தது போல் உங்கள் மனைவியை நேசியுங்கள் "
எபேசியர் 5- 25.
ஒவ்வொருவரும் கர்த்தரின் உருமாற்றும் அன்பிற்காக அவரைத் தேடினால் , இந்தப் பகுதியிலும் ,
"நம்மோடு தொடர்புடையவற்றைக் கர்த்தர் சீர்ப்படுத்துவார் ".
ஜெபம்.
பரலோக பிதாவே,
நீர் என்னை சீர்ப்படுத்துவதாக வாக்களித்திருக்கையில் , நான் சுயமாக என்னை நானே சீர்ப்படுத்த முயன்றதற்காக என்னை மன்னித்தருளும். என்னுடைய வீணான முயற்சிகள் உம்முடைய கிருபையின் ஆவியின் முயற்சிகளை மட்டுப்படுத்த மட்டுமே செய்யும். கர்த்தாவே ! நான் இந்த உலகத்தைப் படிக்கும் முயற்சியிலும்,தேவத்தன்மையில் வளர வேண்டியிருக்கும் என் தேவையையிலும் , வீட்டில் வைத்துள்ள என் உறவு முறைகளையும் , பணியில் என்னுடைய சாட்சியையும் ,உமக்குச் செய்யும் ஊழியத்திலும் , என் வாழ்க்கை முழுவதிலும் , உம்முடைய சீர்ப்படுத்தும் பணியை நிகழ்த்தி அருளுவீராக ! ஏசுவின் நாமத்தினாலே ,
ஆமேன் !
No comments:
Post a Comment