Thursday 2 July 2015

யேகோவா (Yehovah) என்னும் பிதாவாகிய தேவனின் நாமம்.


யேகோவா (Yehovah) என்னும் பிதாவாகிய தேவனின் நாமம்.
யேகோவா என்றால் மாறாதவர், நிலைத்திருப்பவர், தாமாகவே உயிருடன் இருந்து தம்மை வெளிப்படுத்துகிறவர் (Self existing one) என்றும் பொருள்!
எபிரேய மொழியில் உயிரெழுத்துக்கள் இல்லாதிருந்தது எனவே 'யேகோவா' என இருந்த அப்பெயர் YHWH என அமைந்தது !எபிரேய மொழியில் இப்படி எழுதுவர் - יהוה
YHWH என்ற பெயர் மிகவும் புனிதமானது என்று கருதிய யூதர்கள் அதனை கூறாமல் விட்டுவிட்டார்கள் ! எனவே சரியான உச்சரிப்பு இப்பொழுது நமக்கு தெரியாது!
'யேகோவா' என்றும் 'யாவே' என்றும் தற்போது உச்சரிப்பார்! இப்பெயர் இருக்கிறவராகவே இருக்கிறேன் (Yeheye asher yeheye ) (யாத் 3:13 - 14) உடன் தொடர்புடையது .
நம்முடைய வேதாகமத்தில் இத்தனை மகிமை நிறைந்த பெயரே பல இடங்களில் கர்த்தர் என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது !
திருமறையின் தமிழ் மொழி பெயர்ப்புகளில் ஒன்றான விவிலியம் என்னும் மொழிபெயர்ப்பில் தந்தையாகிய இறைவனை குறிக்கும் யேகோவா என்ற சொல்லானது யாவே என்று மொழிபெயர்க்க பட்டுள்ளது !
திருமறையின் பழைய தமிழ் மொழிபெயர்ப்பான பரிசுத்த வேதாகமத்தில் பல இடங்களில் இன்னும் இந்த மகிமை நிறைந்த தேவனின் பெயர் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது !
அதற்கு ஏற்ப யேகோவா என்னும் பெயருடன் இனனைந்து சில எபிரேய சொற்களும் தேவனின் மகிமையான இயல்புகளை விளக்கும் கூட்டு பெயர்களாக பரிசுத்த வேதகாமம் என்னும் தமிழ் மொழி பெயர்ப்பில் ஒளி மங்காமல் அப்படியே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது!ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவைகள் தேவனின் வரையறைக்கு உட்படாத குணவியல்புகளை விளங்கப்படுத்துகிறது!
1.யேகோவாநிசி - கர்த்தர் வெற்றி கொடுக்கிறவர் (யாத் 17:15)
2. யேகோவா ஷம்மா - கர்த்தர் அங்கே இருக்கிறார் . (எசேக் 48:35)
3.யேகோவா ஷாலோம் - கர்த்தர் பூரண சமாதானத்தை தருகிறவர் (நியா 6:24, ஏசா 26:3)
.4. யேகோவா யீரே - கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துகொள்கிறவர் (ஆதி 22:14)
(இது தவிர இம்மொழி பெயர்ப்பில் காணப்படாத வேறு கர்த்தரின் கூட்டு பெயர்களும் இப்பொழுது பயன்பாட்டில் உண்டு!)
---------------------------------------------------------------------------------------------------------------
கீழே காணப்படும் 8 இடங்களிலும் யேகோவா என்று தனியே குறிப்பிடப்பட்டுள்ளது!
யாத் 6:3, சங் 68:4, சங் 83:17, ஏசா 12:2 , எரே 16:21 ஏசா 26:4, எரே33:2 ஓசி 12:5
----------------------------------------------------------------------------------------------------------------
தேவனுக்கு இத்தனை பெயர்கள் இருக்க காரணம் என்ன ? அவரை குறிப்பிட்ட பெயரினாலே வகையறுத்து விட முடியாது என்பதே காரணம். கட்புலனாக இறைவனின் பண்புகளையும் தன்மைகளையும் ஆளுமைகளையும் இவை நமக்கு விளக்கி காண்பிக்கின்றன ! எனவே உங்கள் ஜெபங்களில் ஜெபிக்கும் போது இப்படிப்பட்ட நாமமுள்ள ஆண்டவரே ! நீர் இப்படிப்பட்ட பெயர்களை உடையவராக இருக்கிறீர் உமது பெயரின் படியே எனக்கு உதவி செய்யும் என்று ஜெபம் பண்ணுங்கள்!
---------------------------------------------------------------------------------------------------------------
இத்தூய தேவனின் திருப்பெயரை தங்களிற்கு வைத்து கொண்டு உலகமெங்கும் உள்ள கள்ள உபதேசிகளாகிய '''யெகோவாவின் சாட்சிகள் ''' என்னும் பிரிவினர் இந்த பெயர் பிதாவாகிய தேவனுக்கு மட்டும் உரியது அவர் மட்டும் கடவுள் , கிறிஸ்து கடவுள் அல்ல அவர் வெறும் மனிதர். ஆவியானவர் ஆள்தன்மையுள்ளவர் அல்ல! அவர் வெறும் தேவனின் சக்தி ! என்று விசுவாசிகளையும் கடவுளை அறியாத மக்களையும் வஞ்சிக்கிரவர்களாக்க எமற்றுகிரவர்களாக இருக்கிறார்கள்! எனவே குமாரனாகிய தேவனின் ஆள் தன்மையையும் , பரிசுத்தாவியாகிய தேவனின் ஆள்தன்மையையும் கலங்க படுத்தும் இப்படிப்பட்ட கள்ள உபதேசிகளிடத்தில் எச்சரிக்கையாக இருங்கள் !

1. குமாரனாகிய கிறிஸ்து தேவன் அவருக்கும் யேகோவா என்னும் உன்னத நாமம் வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ளது !
2. ஆவியானவர் வெறும் சக்தி அல்ல அவரும் ஆள் தன்மையுள்ள இறைவன்!
என்பவற்றுக்கான வேத ஆதாரங்களை தொடர்ந்தும் எனது 2 பதிவுகளில் எழுதுகிறேன் ! கண்டிப்பாக வாசியுங்கள் உங்கள் கருத்துக்களை என்னுடன் பரிமாறுங்கள் ! பயனுள்ள பதிவு என்று கருதுகின்ற என்னுடைய கட்டுரைகளை தேவைப்படுவோருடன் பகிருங்கள்! நம்முடைய நம்பிக்கையை குறித்து திட நம்பிக்கையாக இருந்து இறுதி காலத்தில் கள்ள உபதேசங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

உங்கள் சகோதரன் கமலரூபன் 

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord