இன்றைய தியானம்:"இயேசுவை நோக்கிப் பார்த்தல்"
"விசுவாசத்தைத் துவக்குகிறவரும் , முடிக்கிறவருமான இயேசுவை நோக்கி.."(எபி. 12: 1 ).
I) எல்லாவற்றிலும் இயேசுவை நோக்கிப் பாருங்கள் "
அவருக்குள் நாம்பிழைத்திருக்கிறோம்,அசைகிறோம் , இருக்கிறோம் " (அப்போஸ்தலர் 17:28)
பல கிறிஸ்தவர்கள் துன்பம் நெருக்கும்போது இயேசுவை நோக்கிப் பார்க்கத் தயாராக இருக்கின்றனர், ஆனால் எல்லாம் நன்றாக நடக்கும்போது , அவர்கள் தங்களுடைய வரையறுக்கப்பட்ட வலிமையைச் சார்ந்துகொண்டு தோற்றுப் போகிறார்கள் .
நாம் சகலத்திலும் ஏசுவை நோக்கிப் பார்க்க வேண்டும் - அது நல்ல தருணமாக இருந்தாலும் சரி, தீயதாக இருந்தாலும் சரி , மகிழ்ச்சியானாலும் சரி, துக்கமானாலும் சரி, வெற்றியாக இருந்தாலும் சரி, முயற்சியாக இருந்தாலும் சரி. வேதம் நம்மை ஏசுவை நோக்கிப் பார்க்கவே வலியுறுத்துகிறது.
"நாம் இரக்கத்தைப் பெறவும்,ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை அடையவும் " ( எபி 4:14 )
II) "எல்லாவற்றிற்காகவும் இயேசுவை நோக்கிப் பாருங்கள் "
"என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்" (யோவான் 14:13).
சில கிறிஸ்தவர்கள் அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கர்த்தரைச் சார்ந்து கொள்வதில்லை.அவர்களின் சுய முயற்சியையும் , பிற மனிதர்களையும் மட்டுமே நம்பி இருக்கின்றனர். அவர்கள் ஏமாற்றமடைவார்கள்.நாம் வாழ்க்கை, அன்பு, உணவு,உடை, உறைவிடம் இவை அனைத்திற்காகவும் கூட இயேசுவையே நோக்கிப் பார்க்க வேண்டும்.
"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்"
பிலிப்பியர் 4 :19
III)"எல்லாவற்றுடனும் ஏசுவை நோக்கிப் பாருங்கள்"
" உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக "
1 தெசலோனிக்கேயர் 5 :23
சில கிறிஸ்தவர்கள் முற்றிலுமாய் இயேசுவை நோக்கிப் பார்க்கத் தவறிவிடுகின்றனர்.அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தங்கள் சுயத்திற்கென ஒதுக்கி வைக்கிறார்கள்.
நாம் வெற்றியாளர்களாக வேண்டும் என்றால்,நாம் நம்முடைய நேரம்,திறமை, மற்றும் சகல பொக்கிஷங்களுடனும் அவரை நோக்கிப் பார்க்க வேண்டும். நாம் அவருக்கு முற்றிலுமாக நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
பவுல் நம்மிடம்,
" நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை" என்று வலியுறுத்துகிறார்.
ரோமர் 12 :1
IV) "எல்லாவற்றின் மூலமாகவும் இயேசுவைப் பாருங்கள்":
"கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவராக"
1 பேதுரு 5 : 10
சில கிறிஸ்தவர்கள் சந்தோஷமாக இருக்கும் காலங்களில் இயேசுவை நோக்கிப் பார்க்கவும் , துன்பம் நெருக்கும்போது முறையிடவும் , சில சமயங்களில் அவர்மீது பழிபோடவும் கூடச் செய்கிறார்கள்.
கடவுள் அடிக்கடி நாம் விசுவாசத்தில் பலப்பட்டு அவருடைய சித்தத்தை நிறைவேற்றும்படிக்கு சில துன்பங்களை அனுமதிக்கிறார். நாம் பொறுமையுடனும் , விசுவாசத்துடனும் அவருடைய நோக்கத்தைத் தேடியபடி , ஏசுவை நோக்கிப் பார்ப்பதைத் தொடர வேண்டும். அனுபவத்தின் பள்ளத்தாக்கில் பயணிக்கும்போது , பேதுரு அறிவுரை சொல்லுகிறார்,
" கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்"
1 பேதுரு 4 :13
No comments:
Post a Comment