Sunday 12 July 2015

கர்த்தர் தமது ஜனங்களுக்கு எவ்வாறு உதவுகிறார்

"கர்த்தர் தமது ஜனங்களுக்கு எவ்வாறு  உதவுகிறார்"

"தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்"

சங்கீதம் 46 :1 

  I)  கர்த்தர் அவ்வப்போதுள்ள ஜெபங்களின்  மூலமாக நம்மோடு பேசுகிறார். 

"அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்"

சங்கீதம் 91 :15 

வெப்ஸ்டர் 'அவ்வப்போதுள்ள' என்ற வார்த்தைக்கும் பின்வருமாறு   விளக்கம் அளிக்கிறது 
"விரும்பிய  அளவிற்கான தாக்கத்தை உருவாக்கவும்,  அடையவும் , வலிமைவாய்ந்தவர்களாகி, வெற்றியடைவது "

நாம் கர்த்தருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும்போது ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறோம். அவர் நம்மோடு பேசி ,  நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார். கிறிஸ்தவர்கள்  எப்போதுமே ஜெபத்தின் ஆவியில் தொடர்ந்து  கொண்டிருக்க வேண்டும். 
ஏசு கூறினார், " சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும் " 
லூக்கா : 18-1

I I)  தமது விலையேறப்பெற்ற  வாக்குத் தத்தங்களால் அவர் , " இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

2 பேதுரு 1 :4 
பல கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய வாக்குத் தத்தங்களைப் புறக்கணிக்கின்றனர். தங்களது அலுவல் மும்முரத்தினாலும் ,  மற்ற சில காரியங்களினாலும் கர்த்தரின் வார்த்தைகளிலுள்ள நன்மைகளை அவர்களுக்கு இழந்து விடுகிறார்கள்.  
கர்த்தருடைய  விலையேறப்பெற்ற  வாக்குத் தத்தங்களால் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பையும்,  கட்டளைகளையும்  பெறுகின்றனர்.  
தம்முடைய வாக்குத் தத்தங்களின் நிச்சயத்தினால் கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு  உதவுகிறார்.  
நாம் அவற்றை வாசிக்க வேண்டும் ,  ஆராய வேண்டும் , பிரதிபலிக்க வேண்டும் , அதனையே சார்ந்திருக்க வேண்டும். 

III ) அவர் சொந்த சமாதானத்தின் மூலமாக  அமைதிப் படுத்துகிறார். 


"சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்".

யோவான் 14 :27

இன்றைய உலகம் வரைமுறையற்ற காமத்திலும் , போதைப் பக்கத்திலும்,  தீவிரவாதத்திலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

கோடிக்கணக்கான மக்கள் சமாதானத்தைத் தேடித் தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். மெய்யான மற்றும்  அழிவில்லாத சமாதானம் ஏசுவிடம் மட்டுமே காணப்படுகிறது. அவர் தம்மை விசுவாசித்துக் கீழ்ப்படிகிறவர்களுக்கு சமாதானத்தைக் கொடுக்கிறார். 

ஏசு கூறினார், " என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் 
கொடுக்கிறேன் "  யோவான் 14 : 27.  
அவருடைய சொந்த சமாதானத்தை இந்த நாளிலே ஏற்றுக் கொள்ளுங்கள் .

IV) அவர் தம்முடைய அனுகூலமளிக்கும் வல்லமையால் உதவுகிறார்.  
"தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்".

ரோமர் 8 :28

மற்றவர்களைப் போலவே கிறிஸ்தவர்களுக்கும் கூட அலைச்சல்கள்,  பாடுகள்,  சோதனைகள் எல்லாம் உண்டு. ஏசுவை அறிந்து கொண்ட ஒரே காரணத்தினால் மட்டும் அவர்கள் அவற்றில் இருந்து விலக்கி வைக்கப்  படுவதில்லை.  
அவர் தம்முடைய அனுகூலமளிக்கும் காரியங்களால் தமது ஜனங்களுக்கு  உதவுகிறார்.
அவர் செய்வது எதுவானாலும்  (நன்மையோ தீமையோ எதுவாக இருப்பினும் ) அவற்றை நம்முடைய நன்மைக்கு ஏதுவாகவும் ,  தம்முடைய நாம மகிமைக்காகவுமே செய்கிறார். (ரோமர் 8 : 28 ) 
கர்த்தர்  எப்போதும் தம்முடையவர்களைக் காக்கிறார்.  சமயங்களில் உதவுமாறு தம்முடைய தூதர்களை அனுப்புகிறார். 


" உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்"

சங்கீதம் 91 :11 


No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord