Sunday 5 July 2015

தியானம் "நம்பிக்கையிலே களிகூருகிறேன்"

தியானம் "நம்பிக்கையிலே களிகூருகிறேன்"

நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.
என் தேவனே!நான்,நீர் தந்த நம்பிக்கையில் களிகூருகிறேன். 
நான் உம்முடைய வாக்குறுதிகளைப் பற்றிக் கொண்டு, அவற்றை விசுவாசிக்கிறேன்.
நீர் என்னைக் காப்பீரென்று நம்புகிறேன். எது வந்தாலும் கவலையில்லை,நீர் எப்போதும் நல்லவராகவே இருக்கிறீர்.எல்லாவற்றிலும் நீரே என் விடுதலையாக இருக்கிறீர் என்பதையும் விசுவாசிக்கிறேன்.
என்னால் அதைக் காணமுடியவில்லை என்றாலும்,நான் அதனை இன்னும் நம்புவேன்.
ஏனெனில் விசுவாசம் காணப்படாதவைகளிலிருந்தே வருகிறது.
மகிழ்ச்சி நமக்கு வலிமையைக் கொடுக்கிறது. நாம் நம்பிக்கையில் களிகூரும்போது, அது நமக்கு உறுதியான விசுவாசத்தைக் கொடுக்கிறது.
நாம் கர்த்தருடைய விசுவாசத்தையும் , அவர் எப்படிப்பட்ட விசுவாசத்துடன் நடந்து கொண்டார் என்பதையும் , எத்தகு விசுவாசத்துடன் நடந்து கொண்டிருக்கிறார் என்பதையும் , அவர் நமக்கு அளித்திருக்கிற வாக்குறுதிகளின் மூலம் எப்படி நடந்து கொள்ளுவார் என்பதையும் நினைவு கூர்ந்தால் நாம் விசுவாசத்தில் உறுதிப்படலாம். கடவுளின் வாக்குறுதிகளைப் பற்றிக் கொண்டிருந்தால் இருதயத்தில் விசுவாசத்தை வலியுறுத்தும் நம்பிக்கையில் களிகூரலாம். விசுவாசம் என்பது காணப்படாத ஒன்று என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் கண்ணில் காண்பவற்றையெல்லாம் எப்படி நம்ப முடியும்? கடவுளின் நற்றன்மையிலும் , விசுவாசத்திலும்
நாம் வெறும் நம்பிக்கையில் களிகூரும்போது அதுவே நம்முடைய இருதயங்களை
விசுவாசிக்கும்படி பலப்படுத்துகிறது.
நாம் இந்த அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல, ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?
நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.
ரோமர் 8 :24-25
சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள், கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்.பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள், அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.
ரோமர் 12 :10:13

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord