Saturday, 1 August 2015

Hope in Jesus

கிறிஸ்துவின் வழியாய் விவிலியம் :
ஏசு : நம்பிக்கையின் மறு நிர்மானிகர் .
உங்களது மேய்ப்பர் , நீங்கள் இந்த இடத்திற்காக உருவாக்கப்பட்டவர்களல்ல என்பதை அறிந்திருக்கிறார்.
நீங்கள் இந்த  இடத்திற்கெனப்  பயிற்றுவிக்கப் பட்டவர்கள் அல்ல என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். எனவே அவர் உங்களை வழி நடத்த வந்திருக்கிறார் . அவர் உங்கள் ஆத்துமாவை மீட்க வந்திருக்கிறார். அவர் மட்டுமே இதைச் செய்யத் தகுதியுடையவர். 
      அவருக்கு சரியான தரிசனம் உண்டு . . . . அவருக்கு சரியான திசை  உண்டு..... ஆனால் நம்மில் பலர் அவர் கடவுள் என்பதனால் மட்டுமே அவர் சரியான நபர் என்று நினைக்கிறோம். 
யாருக்காவது தன்னை உருவாக்கினவரை விட சிறப்பாகத் திகழும் காட்டைத் தெரியுமா? பாதையில் இருக்கும் கரடு முரடுகளை அதில் பயணித்து அறிந்தவரைத் தவிர வேறு யாரால் நன்கு அறிந்திருக்க முடியும் ?
எனவே கிறிஸ்து பதிலைத் தருவதற்கு பதிலாக ஒரு சிறந்த பரிசைத் தருகிறார் . அவர் தம்மையே நமக்குத் தருகிறார். 
       அவர் காட்டை நீக்கினாரா? 
இல்லை .பயிர் பச்சைகள் இன்னும் அடர்த்தியாக வே காணப் படுகின்றன . 
அவர் கொன்று தின்னிகளை அழித்தாரா?
 இல்லை. அவை இன்னமும் பதுங்கித்தான் இருக்கின்றன. 
         அவர் காடுகளை அழித்து நமக்கு நம்பிக்கையூட்டவில்லை . தம்மையே கொடுப்பதன் மூலமாக நம்பிக்கையளிக்கிறார். 
         அவர் இறுதி வரைக்கும் நமக்கு வாக்களித்தார்,
 "  இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" .
மத்தேயு 28 :20 .
    அந்த நினைவு படுத்தி நமக்குத் தேவை. நம் அனைவருக்குமே அது தேவை. ஏனெனில் நம் அனைவருக்குமே நம்பிக்கை தேவைப் படுகிறது. 
      உங்களது நம்பிக்கையை  மீட்டுக் கொள்வது இன்று வேண்டுமானால் தேவைப் படாமல் இருக்கலாம். ஆனால் நாளைக்கு அது நிச்சயமாகத் தேவைப் படும். 
எனவே யாரிடம் திரும்ப வேண்டுமென்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
       ஒரு வேளை இன்றிலிருந்தே நீங்கள் விசுவாசிப்பது தேவையான காரியமாக இருக்கலாம். 
நீங்கள் இந்த இடத்திற்காக உருவாக்கப்படவில்லை என்பதையும் , நீங்கள் அதற்கெனப் பயிற்றுவிக்கப் படாதவரென்றும் நீங்கள் அறிவீர்கள். 
    உங்களை முன்னின்று நடத்த ஒருவர் தேவைப்படுகிறார். 
அப்படியென்றால் உங்களது மேய்ப்பரை அழையுங்கள் . அவர் உங்களது குரலை அறிந்திருக்கிறார் . அவர் உங்களது  விண்ணப்பத்திற்காகவே காத்திருக்கிறார்.
(மேக்ஸ் லுக்காடோவின் 
"உலாவும் ஒளி" நூலிலிருந்து )

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord