Saturday, 1 August 2015

அவர் போதிப்பவைகளைப் பேசுங்கள்.

"அவர் போதிப்பவைகளைப் பேசுங்கள்."
By CHS

ஆதலால் நீ போ, நான் உன் வாயோடே இருந்து நீ பேச வேண்டியதை உனக்குப் போதிப்பேன் (யாத்.4:12).
Matthew 10: 20. பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.

ஆண்டவரின் ஊழியக்காரரில் பலர் பேச்சாற்றல் அற்றவர்களாய் இருக்கிறார்கள். அந்நிலையில் ஆண்டவரை ஆதரித்துப் பேசவேண்டிய வாய்ப்புக்கிட்டினால் சந்தர்ப்பத்தைத் தங்கள் சாமர்த்தியம் இன்மையால் இழந்துவிட நேரிடுமோ என்னும் குழப்பத்தில் வீழ்ந்து தவிக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பேச்சாற்றல் அற்ற நாவை உண்டாக்கினவரே ஆண்டவர் என்றும் நம்மைப் படைத்தவரை நாம் குறைசொல்லக் கூடாதென்றும் நினைவுபுடுத்திக் கொள்ளவேண்டும். ஒருவேளை விரைவாகப் பேசுவதைக் காட்டிலும் விரைவாகப் பேசுவதே தீமை விளைவிப்பதாய் இருக்கலாம். குறைவான சொற்களைப் பேசுவது அநேகமான சொற்களைப் பேசுவதைக் காட்டிலும் அதிகமான ஆசீர்வாதங்களைக் கொடுப்பதாய் இருக்கலாம். சொல்லணிக் கலையும் சொல்லாட்சித்திறமும் சொல்நயமும் நிறைந்த பேச்சில் உண்மையான ஆற்றல் இருப்பதில்லை என்பது நிச்சயம். பேச்சுத்திறம் இல்லாதது நாம் நினைப்பது போல் பெரிய குறைபாடல்ல. 

நம் நாவிலும் மனதிலும் ஆண்டவரின் திறமிருந்தால் சத்தமிடுகிற வெண்கலத்தையும் ஓசையிடுகிற கைத்தாளத்தையும் விட சிறப்பான ஆற்றல் வாய்ந்தவர்களாய் இருப்போம். ஆண்டவரின் போதனையே ஞானமாகும் அவர் பிரசன்னம் ஆற்றலாகும். பேச்சு வலிமை உள்ளவர்களாய் எகிப்தில் இருந்தவர்களை விட திக்குவாயரான மோசேக்கு பார்வோன் பயப்படவேண்டியதாயிற்று. ஏனெனில் அவர் சொன்னவை ஆற்றல் வாய்ந்தவையாய் இருந்தன. மோசே வாதைகளையும் மரணத்தையும் அறிவிக்கிறவராய் இருந்தார். இயற்கையாக நமக்கு இருக்கும் பலவீனத்தில் ஆண்டவர் நம்மோடு இருந்தால் வியக்கத்தக்க ஆற்றலும் வலிமையும் உள்ளவர்கள் ஆவோம். ஆகையால் நாம் பேசத்தக்க விதமாய் தைரியமாக இயேசுவுக்காகப் பேசுவோமாக!

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord