ஒரு குட்டிக் கதை...
ஒரு காலத்தில் பல மீன்கள் ஒரு குட்டையில் வசித்து வந்தன. தினமும் அவை காலையில் எழும்போதே மீனவனின் வலை குறித்த அச்சத்துடனே எழ வேண்டியிருந்தது. மீனவனும் நாள் தவறாமல் அங்கே வந்து வலை வீசினான். ஒவ்வொரு நாளும் தவறாமல் அவனுடைய வலையில் மீன்கள் சிக்கிக் கொண்டு தான் இருந்தன.
சில மீன்கள் வியப்பிலும் , சில மீன்கள் தூக்கக் கலக்கத்திலும் , சில மீன்கள் மற்ற மீன்களைப் போல ஒளிந்து கொள்ள இடம் கிடைக்காமலும் , மறைந்திருக்கும் அபாயத்தைப் பற்றி அறிந்திருந்த போதிலும் , சாவுக்கு ஏதுவான அந்த வலையில் சிக்கிக் கொண்டு தான் இருந்தன .
அந்த மீன்களுக்குள் நம்பிக்கை மிகுந்த இளைய மீன் ஒன்று இருந்தது. அது மீனவனின் வலையைப் பற்றிக் கவலைப் படாமல் , தப்பித்து வாழும் கலையைக் கற்றிருந்தது. அனைத்து மூத்த மீன்களும் இந்த சிறிய மீனின் ரகசியம் என்னவாயிருக்கும் என்று வியந்தன. இத்தனை ஞானத்தை சேகரித்து வைத்திருக்கும் தாங்களே தடுமாறும் போது , இந்த சிறிய மீன் மட்டும் தன்னை வலையிலிருந்து விடுவித்துக் கொள்வது எப்படி என்று வியந்தன.
ஆர்வத்தை அடக்க முடியாமல் , வலையிலிருந்து தப்பும் வித்தையைக் கற்றுக் கொள்ள , ஒரு மாலைப் பொழுதில் எல்லா மீன்களும் இந்த சிறிய மீனிடம் வந்தன.
" ஏ குட்டிப் பையா ! நாங்க எல்லாரும் உங்கிட்ட பேசறதுக்காக வந்துருக்கோம் " என்றன.
" ஏங்கிட்டேயா? " குட்டி மீன் கேட்டது.
"என்ன பேசணும்
ஏங்கிட்ட ?".
" இல்ல. நாங்க எதுக்கு வந்தோம்னா , நாளை காலைல மீனவன் வந்து வலையைப் போடுவானே , அதப் பத்தி உனக்கு பயமே இல்லையா? "
குட்டி மீன் புன்னகையுடன் சொன்னது
"இல்லை, ஒருக்காலும் நான் அதில் சிக்கிக் கொள்ள மாட்டேன்".
"அந்த தைரியத்தையும் , நம்பிக்கையின் ரகசியத்தையும் எங்க கிட்டேயும் கொஞ்சம் சொல்லேன்டா குட்டிப் பையா !". முதிய மீன்கள் ஒன்றாய்க் கேட்டன.
"அட அது ரொம்ப சின்ன விஷயந்தான்"
குட்டி மீன் சொன்னது.
" அவன் வலை வீசும் போது நான் அவனது காலடியில் பதுங்கிக் கொள்வேன் . அங்கே அவன் நினைத்தால் கூட வலை வீச முடியாது. எனவேதான் நான் சிக்கிக் கொள்வதே இல்லை "
எல்லா மீன்களும் இந்தக் குட்டி மீனின் அறிவைக் கண்டு வியந்தன.
இது போலவே மாயையானவன் வலை வீசும் போது அவன் காலடியில் பதுங்கித் தப்பித்துக் கொள்ளலாம்.
Psalm 119:37 மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
செய்தியின் எளிமை எனக்குப் பிடித்தது.
No comments:
Post a Comment