Saturday 27 June 2015

முதலிடம் யாருக்கு?

முதலிடம் யாருக்கு?  
நன்றி. அனுதினமன்னா குழு.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். - (மத்தேயு 6:33).

ஸ்காட்லாந்தை சேர்ந்த எரிக் லிடல் என்னும் வாலிபர்; தன்னை சீனாவுக்கு மிஷனெரியாக செல்ல அர்ப்பணித்திருந்தார்;. அவருக்கு பல சிறப்பு திறமைகளும் காணப்பட்டன. குறிப்பாக கால்பந்து வீரனாகவும், ஓட்டப்பந்தய வீரனாகவும் சிறந்து விளங்கினார். கால்பந்தில் ஸ்காட்லாந்து தேசிய அணியிலும், ஓட்டப்பந்தயத்தில் இங்கிலாந்திலும் பிரபலமாக திகழ்ந்தார். 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில்எரிக் நிகழ்த்திய சாதனையை இங்கிலாந்தில் 35 வருடங்களுக்கு யாராலும் முறியடிக்க முடியவில்லை. 1924-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இவருக்கு கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஓட்டப்பந்தயத்திற்கான தேர்வு ஓட்டம் ஒரு ஞாயிற்றுக் கிழமைக்கு குறிக்கப்பட்டிருந்தது. எரிக் ஞாயிற்றுகிழமை ஆராதனைக்கு செல்ல வேண்டும் என்பதால் ஓட மறுத்து விட்டடார். உலகின் புகழை சம்பாதிப்பதைவிட தேவனுக்கு கீழ்ப்படிவதே சால சிறந்தது என்பதே அவர் நன்கு அறிந்திருந்தார், மட்டுமல்ல, அதே ஞாயிற்றுகிழமையில் ஒரு ஆலயத்தில் பிரசங்கம் பண்ண ஒப்புக்கொண்டு அதை நிறைவேற்றினார். இவருடைய இச்செயலை தேவன் கனம் பண்ணினார். எப்படியெனில், மூன்று நாட்களுக்கு பின் நடந்த அந்த ஒலிம்பிக் ஓட்ட பந்தயத்தில் சிறப்பாக வெற்றி பெற்று உலக சாதனை நிகழ்த்தினார். தம்மை கனம் பண்ணுகிறவர்களை கனம் பண்ணுகிற தேவனல்லவா நம் தேவன்!

தான் அர்ப்பணித்திருந்தபடியே சீனாவுக்கு மிஷனெரியாக சென்று மகிமையான ஊழியத்தை நிறைவேற்றினார். 1945ஆம் ஆண்டு மறுமைக்குள் பிரவேசித்தார். இவருடைய பெயர் பரலோகில் மட்டுமல்ல, இப்பூமியிலும் எல்லோராலும் கனப்படுத்தப்பட்டது.

இதை வாசிக்கிற நாம் நம் தேவனுக்கு எப்படி முதலிடம் கொடுககிறோம்? எத்தனை நாட்கள் சிறு சிறு காரியங்களை சாக்குபோக்காக காட்டி ஞாயிறு ஆராதனையை புறக்கணித்திருக்கிறோம்! சிலரது வாழ்க்கையில் இடறல்கள், போராட்டங்கள, பாடுகள், துன்பங்கள் வந்தாலொழிய மற்ற எவ்விதத்திலும் தேவனை தேடுகிற உணர்வே அவர்களுக்கு வருவதில்லை. அவர்கள்; முதலிடம் கொடுப்பது சமுதாய அந்தஸ்திற்கும் ஐசுவரிய வாழ்விற்குமே!

தாவீது தன் மகன் சாலமோனிடம், 'நீ தேவனை தேடினால் உனக்கு தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் என்றைக்கும் கைவிடுவார்' என்று கூறுகிறார். அவ்வசனத்தை நமக்கு அன்பான ஆலோசனையாகவும், அதே வேளையில் எச்சரிப்பாகவும் எடுத்து கொள்ள வேண்டும்.

தேவனுக்கு நம் வாழ்வில் முதலிடம் கொடுக்கும் போது, உலகத்தாரின் பார்வையிலே நாம் ஒரு சில நன்மைகளை வீணாக இழப்பதுபோல தோன்றலாம். உதாரணமாக ஞாயிற்று கிழமை நமது வியாபார ஸ்தலத்தை மூடிவிட்டு ஆலயத்திற்கு செல்லவும், குடும்பத்தோடு மகிழ்வாய் இருக்கவும் தீர்மானிக்கலாம். அதனால் அன்றைய வியாபாரம் பாதிக்குமே, அது மற்றவர்கள் வசமாகுமே என்று பிறர் யோசிக்கலாம். ஆனால் தேவனை முக்கியப்படுத்தியதால் வருமானம் குறைந்தாலும் அந்த குறைந்த வருமானத்தை தேவன் ஆசீர்வதித்து கடனில்லாத வாழ்வை அளிக்க முடியும் அல்லது அந்த நாளின் வருமானத்தை மற்ற ஆறு நாட்களில கூட்டி கொடுக்கவும் முடியுல்லவா? இப்படி ஒவ்வொரு காரியத்திலும் தேவனுக்கு முதலிடம் கொடுககும்போது, தேவன் நம்முடைய தேவைகளை அதிசய விதமாய் சந்திக்க வல்லவராயிருக்கிறார்.

தேவனுக்கு நம் முதன்மையையும் சிறந்ததையும் கொடுப்போம். அவருடைய ராஜ்யத்தை தேடுவோம். அவருடைய நீதியை தேடுவோம். அப்போது தேவன் நம் ஒவ்வொருவருடைய தொழிலிலும், படிப்பிலும்;, குடும்பத்திலும்; நம்மை முதலிடத்திற்கு கொண்டு வருவார். ஆமென் அல்லேலூயா!

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord