Saturday 27 June 2015

கர்த்தாவே என் மேல் இரக்கமாயிரும்.

இன்றைய தியானம்
 
கர்த்தாவே என் மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன். - சங்கீதம் 41:4
 
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே,
இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
 
பிரியமானவர்களே, சங்கீதக்காரனாகிய தாவீது தன் ஆத்துமாவிலே பலவீனப்பட்டு காணப்படும்போது கர்த்தரை நோக்கி பாடுகிற பாடலில் கர்த்தாவே, என் மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோமாய்ப் பாவஞ்செய்தேன் என்று கூறுகிறான். ஆமென். எனக்கன்பானவர்களே, நாமும் பலவீனத்தோடு வியாதியோடு காணப்டுகிறதான வேளையிலே தாவீதைப் போல் இந்த அறிக்கையை செய்வோமென்று சொன்னால் கர்த்தர் நம்மேல் இரங்குவார். நமக்கு சுகம் தருவார்.
 
ஆண்டவருடைய இரக்கத்தை செஞ்சி மன்றாடி அவருக்கு விரோதமாய் செய்த பாவம் எதுவானாலும் மறைக்காமல் அவரிடம் அறிக்கை செய்வோமானால் நமக்கு அவரிடத்திலிருந்து ஆறுதல், சுகம், விடுதலை சத்துருக்களிடமிருந்து ஜெயம் கிடைக்கும்.
 
இதை வாசிக்கும் பிரியமானவர்களே, 2நாளா.30:20ல் எசேக்கியா ஜனங்களுக்காக விண்ணப்பஞ்செய்து, அவர்களுக்கு கர்த்தர் மன்னிப்பை தரும்படி இரக்கத்தை கெஞ்சி மன்றாடினான். அப்பொழுது கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அநுக்கிரகம் செய்தார் என்று வாசிக்கிறோம். சுத்திகரிக்கப்படாமல், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாமல், அவரை சேவியாமல் வாழ்ந்த ஜனங்களுக்காக கர்த்தரின் இரக்கத்தை கெஞ்சி மன்றாடினான்.
 
எனக்கன்பானவர்களே, அதேபோல நாமும் நம் குடும்பத்திலுள்ளவர்களுக்காக, சபையாருக்காக, ஊழியர்களுக்காக கர்த்தாவே எங்கள் மேல் இரக்கமாயிரும், உமக்கு விரோமாய்ப் பாவம் செய்தோம் என்றும் சங்.6:2ன்படி தாவீது விண்ணப்பம் செய்ததுபோல செய்வோமானால் சங்.103:3ன்டி அவர் நம் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, நம் நோய்களையெல்லாம் குணமாக்கி, சங்.147:3ன்படி நம்முடைய நொறுங்குண்ட இருதயத்தைக் குணமாக்குவார்; நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
 
பிரியமானவர்களே, தாவீதைப்போல, எசேக்கியாவைப்போல இரக்கத்திற்காக கெஞ்சுவோம்.         
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களோடிருப்பாராக, உங்களை நடத்துவாராக.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord