Saturday, 27 June 2015

மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைப் காண்பார்கள். - லூக்கா 3:5

இன்றைய தியானம்.
By Sister.Mary.

மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைப் காண்பார்கள். - லூக்கா 3:5
 
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே,
இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
 
பிரியமானவர்களே, யோவான் ஸ்நானகன் ஊழியம் செய்யும் நாட்களில் ஏசா.40:5ல் தீர்க்கதரிசனமாக உரைத்ததை, மேற்கொள் காட்டி பிரசங்கித்ததை, லூக்கா 3:5ல் மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்று கூறுகிறதை வாசிக்கிறோம். உலகம் எங்கிலுமுள்ள ஜனங்களுக்கு தேவனுடைய இரட்சிப்பு, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் மூலம் தான் கிடைக்கும். அதற்கு தடையாக காணப்படும் சகல தடைகள், கோணலானவைகள் எல்லாம் தகர்க்கப்படும்.
 
பிரியமானவர்களே, அதைத்தான் லூக்கா 2:10-11ல் எழுதியுள்ளார். எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷம் உண்டாக்கும் நற்செய்தியை தூதன் மூலம் கொடுத்து, கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் பிறந்திருக்கிறதை அறிவித்தார். அந்த இரட்சகரைக் காண லூக்கா 2:30-31ல் சிமியோன் என்னும் தேவபக்தியுள்ளவன் எருசலேமில் இருந்தான். அவன் அந்த இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
 
இதை வாசிக்கும் எனக்கன்பானவர்களே, சங்.98:3ல் பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது என்று எழுதுகிறதை வாசிக்கிறோம். இந்த நாளில் பூமியெங்குமுள்ள மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காணும்படி ஜெபிப்போமா? ஏசா.49:6லும் ஆண்டவராகிய இயேசுவே, பூமியின் கடைசிபரியந்தமும் உள்ள ஜனங்கள் எல்லாருக்கும் இரட்சிப்பாயிருக்கும்படி பிதா இயேசுவானவரை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தார் என்று வாசிக்கிறோம்.
 
பிரியமானவர்களே, இரட்சிப்பைக் குறித்ததான வாக்குத்தத்தமான வசனங்களை அறிக்கைச் செய்து ஜெபம் செய்யும்படி கர்த்தர் கிருபைத் தருவாராக. ஏசா.52:10ன்படி எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும், பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்ற வார்த்தையையும், லூக்கா 3:5யும் விசுவாசித்து, அப்படியே நிறைவேறிட ஜெபிப்போம். ஜெபத்திற்கு கர்த்தர் பதில் தருவார்.
 
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களோடிருப்பாராக, உங்களை நடத்துவாராக.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord