Thursday 8 October 2015

Today's meditation

இன்றைய தியானம் 
"திறந்த மனதுடன் தேவனின் வார்த்தையைக் கேள்"
ஆகையால் பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்இ வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும்இ சோதனைநாளிலும் நடந்ததுபோலஇ உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். (எபிரெ.3:7-8)
திறந்த மனதுடன் கேள் என்றால,தேவன் கூறுவது அனைத்தையும் கேட்க தயாராக இருத்தலவேணடும்;தேவன் உன்னை திருத்தவோ அல்லது அரவனைக்கவோ, உறுதிப்படுத்தவோ எதுவாக இருந்தாலும் முழுமனதுடன் தேவனின் மீது உன் எண்ணங்களை வைக்கவேண்டும்.
இதை செய்வது எப்போதும் எளிமையானது அல்ல,
நீ தேவனிடம் ஊக்குவித்தலை,அரவனைப்பை, எதிர்பார்கலாம் ஆனால் அவரின் வார்த்தை உனது எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் எச்சரிக்கையாக இரு.நீ தேவன் கூறுவதை உன் மனம் கேட்க வில்லை என்றால், உன் இதயம் கடினமானதாக போய் தூய ஆவிக்கு செவிக்கொடுக்காமல் போய்விடும். நீ தந்தையின் வார்த்தையை கேட்கும் போது பணிவோடு பரிசுத்த ஆவியை பற்றிக்கொள் அவரை சார்ந்து இரு. பரிசுத்த ஆவியானவர் உன் வாழ்க்கையில் நீ மாற்றவேண்டிய, மாறவேண்டிய காரியங்களை பற்றி உனக்கு காட்டும் போது நீ அது குறித்து அதிர்ச்சி அடையவேண்டாம்.எதைக்கேட்க வேண்டும், எதைக்கேட்க வேண்டாம் என நீ முடிவு செய்யவேண்டாம்.தேவன் கூறும் அனைத்தையும் கேட்டு அவருக்கு  கீழ்படிந்து நட. உன் வாழக்கையின் நன்மைக்காகவும்,முன்னேற்றத்திற்காகவும்,உனக்கு சுகம் கொடுக்கவுமே  பரிசுத்த ஆவியானவர் உனக்கு இவற்றை எல்லாம் வெளிப்படுத்துகிறார்.நீ அவர் கூறும் எச்சரிக்கையை கவனிக்க வில்லை என்றால் உன் வாழ்க்கை வீணாகி விடும்.அன்பு உள்ளங்களே உனது நன்மைக்காவே தேவன் பரிசுத்த ஆவியின் வழியாக உன்னோடு பேசுகிறார்.தேவன் கூறுவதை நீ கேள் அது உனக்கு விருப்பம் உள்ளவையாவோ,விருப்பம் இல்லாதவையாகவோ இருக்கலாம.; தேவன் உனக்காக நல்ல உயர்வான குறிக்கோளை வைத்துள்ளார், என்ற நம்பிக்கையில் தேவன் கூறுவதைக்கேள்.ஆண்டவரே என் இதயத்தையும,; கண்களையும் திறந்து விடும,; 
ஜெபம்
நான் உமது வார்த்தைகளை தெளிவாகக்கேட்க தயைப்பன்னும் அன்பு ஆண்டவரே.ஆமென்
தேவனில் அவர் கூறும் வார்த்தைகளளை திறந்த மனதுடன் தெளிவாக கேள்.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord