Thursday 27 August 2015

அன்பே பிரதானம்.

அன்பே பிரதானம்!
இயேசு என்பது மூன்றெழுத்து, இயேசு போதித்த அன்பு மூன்றெழுத்து, அன்பின் சின்னமாம் சிலுவை மூன்றெழுத்து.
கிறிஸ்தவம் என்பது மதம் அல்ல. அது அன்பின் மார்க்கம். ஒருவனுக்குள் அன்பிருந்தால் அவன்தான் கிறிஸ்தவன். உன்னைப் போல் பிறனை நேசி என்பதே கிறிஸ்தவம்.
அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும், அன்பு ஒருக்காலும் ஒழியாது.
ஓழியாத அந்த அன்பு எவனுக்குள் இருக்கிறதோ அவன்தான் கிறிஸ்தவன். (கிறிஸ்து+அவன்)
மாற்கு 12:30-31 சொல்கிறது, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனத்தோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால் உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக.
தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்பு கூறவேண்டும். உன்னைப்போல் பிறனை நேசிக்க வேண்டும். இதுதான் கிறிஸ்தவ அன்பு. தேவனிடத்தில் அன்பு கூருகிறேன் என்று சொல்லிவிட்டு, பரிசுத்த ஓய்வுநாளில் உனக்கு இஷ்டமானதை நீ செய்வாயானால் உன்னிடத்தில் தேவ அன்பு இல்லை என்பதே உண்மை!
ஓய்வுநாள் ஆண்டவருக்குரியது. ஆறுநாளை கர்த்தர் உனக்கு கொடுத்திருக்கிறார். உன் இஷ்டப்படி அந்த நாட்களை நீ பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஏழாம்நாள் தேவனுக்கு உரியது. தேவனுக்குரியதை தேவனுக்கும், இராயனுக்குரியதை இராயனுக்கும் கொடுப்பாயாக என்று இயேசு கிறிஸ்து அல்லவா சொல்லியிருக்கிறார்.
ஏழாம்நாள் பரிசுத்த ஓய்வுநாள். அந்த நாளில் நீ வீட்டில் ஓய்ந்திருக்க கூடாது. உன் குடும்பத்தோடு தேவ சந்நிதானத்திற்கு அவசியம் நீ வந்தாக வேண்டும். ஆறுநாளில் நீ சம்பாதித்த உன் கைக்கிரியைகளின் பலனை தேவ சமூகத்திற்கு நீ எடுத்து வரவேண்டும். கர்த்தரை அன்போடு தொழுது கொள்ள வேண்டும். கர்த்தருக்காக அந்த நாளை நீ செலவிட வேண்டும்.
செல்போன் பாட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்வதுபோல், ஓய்வுநாளில் நீ உன்னை ஆவிக்குரிய வாழ்விலும், உலக வாழ்விலும் ஜெயம் பெறுவதற்காக பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த ஆறு நாட்களுக்கு வேண்டிய கர்த்தரின் கிருபைகளை சுதந்தரித்துக் கொள்ளும்படியாக கர்த்தர் சமூகத்தில் உன்னை நீ தாழ்த்த வேண்டும்.
உலகத்தில் உங்களுக்கு உபத்திரம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்பதாக கர்த்தர் உனக்கு வாக்கு பண்ணியிருக்கிறார். கர்த்தருக்குள் நீ உன்னை திடப்படுத்திக் கொள்ளும்படியான நாள் தான் கர்த்தரின் பரிசுத்த ஓய்வுநாள். 
God Bless You!

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord