Monday 24 August 2015

கேள்விக்கென்ன பதில்?

கேள்விக்கென்ன பதில்? 

😀அந்நிய பாஷை பற்றி வேதாகமம் சொல்வது என்ன?
நீங்கள் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்? அந்நிய பாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன் என்று 1.கொரிந்தியர் 14:9,13ல் சொல்லப்பட்டுள்ளது. நமக்கு வழிகாட்டி வேதாகமம்தான். வேதத்தின்படி நடந்து கொள்வோமாக.

😂ஆகாத சம்பாஷணை நல்லதா?
ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும் என்று 1.கொரி.15:33ல் சொல்லப்பட்டுள்ளது.

😁மரித்தோர் உயிர்த்தெழுதலில் எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்கள்?
1.கொரி.15:42-44ல் பார்க்கும்போது, அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும். கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும், பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும், ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும், அதாவது வானவருடைய சாயலை நாம் அணிந்து கொள்வோம்.

😂கிறிஸ்துவுக்குள்ளான அனுபவம் எப்படியிருக்கும்?
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான், பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின என்று 11.கொரி.5:17ல் பார்க்கிறோம்.

😀நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயம் என்பதன் அர்த்தம் என்ன?
நான் அவர்களுக்குள்ளே (மனுஷர்) வாசம் பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று தேவன் தாமே சொல்லியிருப்பதின் மூலம் நாம் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறோம். (11.கொரி.6:16) தேவனுடைய ஆவி நமக்குள்ளிருக்கிறபடியால், 1.கொரி. 3:16-17ன்படி சரீரத்தை காத்துக் கொள்வோமாக.

😁தேவனுக்கேற்ற துக்கம், லௌகிக துக்கம் வித்தியாசம் என்ன?
தேவனுக்கேற்ற துக்கம், இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது, லௌகிக துக்கம் மரணத்தை உண்டாக்குகிறது. (11.கொரி.7:10)

😁கொடுப்பதைக் குறித்து வேதாகமம் சொல்வது என்ன?
சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன், உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். (11.கொரி.9:6-7)

😈யார் வெட்கப்பட்டுப் போவார்கள்?
சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றி பெருமை பாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்கள் என்று சங்.97:7ல் சொல்லப்பட்டுள்ளது.

😁நம் கர்த்தர் எப்படிப்பட்டவர்?
கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர், எப்பொழுதும் கடிந்து கொள்ளாதவர், என்றைக்கும் கோபங்கொள்ளாதவர் சங்.103:3-13 வாசிக்கவும்.

😀பொய் நாவினால் பொருளைச் சம்பாதிப்பவன் நிலை என்னவாகும்?
பொய் நாவினால் பொருளைச் சம்பாதிப்பது, சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம் போலிருக்கும் என்று நீதி.21:6ல் சொல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord