Friday 3 July 2015

Please read this mini story

!!!!!!!!!!!Please read mini story!!!!!!!!!!!!!!

ஒரு ஏழை விதவை தாய்க்கு ஒரே மகன் இருந்தான். தன் தாயின் கஷ்டங்களை உணர்ந்து, ஊக்கமாகப் படித்த அவன் முடிவில் அந்த தேசத்திலேயே சிறந்த மதிப்பெண் பெற்றதால் முதல் மாணவனாகத் தேர்ந்து எடுக்கப்பட்டான்.

அவனைக் கௌரவிக்கும் பொருட்டு அரசாங்கத்தினர் மாபெரும் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அவன் தன் தாயை அந்த விழாவிற்கு வருந்தி அழைத்தான். அவள் தன் ஏழ்மையையும், கந்தல் துணிகளையும் சுட்டிக்காட்டி, "மகனே, என்னால் உன் மதிப்புக் குறையக்கூடாது" என்று மறுத்துப் பார்த்தாள் மகனோ விடவில்லை.

தேசத்தின் பெரிய பிரமுகர்கள், அதிகாரிகள், மந்திரிகள் பெரிய பெரிய கார்களில் வந்து இறங்கினார்கள். ஏராளமான கூட்டம், பிரகாசமான விளக்குகள், பட்டு சேலைகளுக்கும்,நாகரீக உடைகளுக்கும், நடுவே தன் ஏழைத் தாயை அழைத்து சென்றான். 

பட்டமளிப்பு விழா தொடங்கியது. கை ஒலிகள் முழங்க காமிராக்கள் பளிச்சிட பெரிய தங்கப்பதக்கத்தை அவனுக்கு வழங்கினார்கள். எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்க மேடையிலிருந்து இறங்கிய அவன், அதை தன் தாயின் கிழிந்த சேலையில் அணிவித்தான், "அம்மா இது உங்களுக்கே உரியது ; நீங்களே இதை சம்பாதித்தீர்கள். உங்களைப் பற்றி நான் வெட்கப்படுவேனோ அம்மா " என்றான் ஆனந்த கண்ணீரோடு!

அதே போல "இயேசு ராஜா, எனக்காக சிலுவை சுமக்க நீர் வெட்கபடவில்லை. காறிதுப்பட்டீர். சவுக்கடிகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டீர், நொறுக்கப்பட்டீர்,பிழியப்பட்டீர். உம் இரத்ததையும், ஜீவனையும் எனக்காக ஊற்றிக் கொடுத்தீரே, இயேசுவே உம்மைப்பற்றி நான் வெட்கப்படுவேனோ "?

நாம் இயேசுவைப் பற்றியும் அவருடைய அன்பைப்பற்றியும் மற்றவர்களிடம் சொல்வதற்கு நாம் வெட்கபடக்கூடாது......ஆமென் அல்லேலூயா


No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord