Tuesday 14 July 2015

Conditions to receive the Holy Spirit

பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகள் :
1) ஜெபிக்கும்போது :
"பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க  பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்"
லூக்கா 11 :13

2) ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்போது.

  பின்னர் பேதுரு அவர்களிடம் சொன்னார், 
"நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்"
அப்போஸ்தலர் 2 :38

3. விரும்பும்போது : 
பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
யோவான் 7 :37

"வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்"யோவான் 7 :38

4) விசுவாசிக்கும்போது :

"தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை"யோவான் 7 :39

5) கீழ்ப்படியும்போது: 

"இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்தஆவியும் சாட்சி என்றார்கள்"
அப்போஸ்தலர் 5 :32

6) காத்திருக்கும்போது:

"என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்"லூக்கா 24 :49 

7) அபிஷேகிக்கப்பட்ட பரிசுத்தவான்கள்  தலையில் கை வைக்கும்போது :

"நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்தஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் அந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்"
அப்போஸ்தலர் 8 :19

8) ஆவிக்குரிய செய்திகளைக் கவனிக்கும்போது :

" நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோல, அவர்கள்மேலும் இறங்கினார்"
அப்போஸ்தலர் 11 :15

"யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைவுகூர்ந்தேன்"

அப்போஸ்தலர் 11 :16

" ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்குத் தேவன் வரத்தை அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும் போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான்"

அப்போஸ்தலர் 11 :17

இணை வசனங்கள் :
" நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்,அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான்"

மாற்கு 1 :8 
"ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்தஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்"

1 தெசலோனிக்கேயர் 4 :8 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! 

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு ஆசீர்வதிக்கப் பட்டவர்களாய் வாழுவீர்களாக !


No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord