Saturday 18 July 2015

"திரைப்படமும் தொலைக்காட்சியும் பார்ப்பது பாவமா?

"திரைப்படமும்  தொலைக்காட்சியும் பார்ப்பது பாவமா 
நாகரிகமான உடை அணிவதும், கொஞ்சமாய் மது அருந்தவதும் பொழுதுபோக்காய் சீட்டு விளையாடுவதும், திரைப்படத் துறையில் பணிபுரிவதும் பிற மதத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொள்வதும் என்ன பாவமான காரியங்களா ?" 
இப்படி எல்லாம் பலர் கேள்வி கேட்கிறார்கள். 
       
அவைகள் பாவமா இல்லையா என்பதல்ல காரியம். ஆனால் அவையெல்லாம்  ஒரு போற்றத்தக்க தேவ வாழ்க்கை வாழ உதவுபவைதானா ? 
ஒரு சிறப்பான அழைப்பைப் பெற்றவர்களுக்கு  இவை பொருத்தமானவையா ?
இது போன்ற காரியங்களில் ஈடுபட்டபடியே சுத்த  இருதயத்தோடு பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சாத்தியந்தானா ? 
அவை என்னுடைய  இருதயத்தைக் களங்கப்படுத்துமா?
அவை கர்த்தரோடு நான் கொண்டிருக்கும் உறவை பாதிக்கக் கூடுமாஇவையே நாம் கேட்க விரும்பும் கேள்விகள். 

          
அரசவையில் பறிமாறப்படும் அனைத்து உணவு வகைகளும்  தூய்மையற்றவை என்று நாம் கூறிவிட  முடியாது.  இருந்தாலும் , தன்னைக் கர்த்தருக்கான பரிசுத்த வாழ்க்கைக்கு ஒப்புக் கொடுத்த  தானியேல் , அந்த  உணவும் கூடத் தனக்குப் பொருத்தமானதில்லை என்று முடிவெடுத்தார்.

       எனவே அவை பாவமானவையா இல்லையா என்பதல்ல கேள்வி. நமக்கு உதவுபவையா இல்லையா என்றே கேட்கவேண்டும். 

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord