மன அழுத்தத்தை வெல்ல :
"ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்"
மத்தேயு 6 :34
I) அமைதிப் படுத்துகிற காரியங்களில் கவனம் செலுத்துங்கள்.
"உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்"
பிலிப்பியர் 4 :8
இன்றைய சமுதாயம் இரைச்சலாலும் ,  குழப்பங்களினாலும் பிடிக்கப்பட்டிருக்கிறது.
அதனுடைய இசை சத்தமாகவும் ,  இடிமுழக்கத்தைப் போலவும் இருக்கிறது. அதன் பொழுது போக்கு வெடித்துச் சிதறப் பண்ணுவது , சில நேரங்களில்  அழிவைக்கூட ஏற்படுத்துவது.
மன அழுத்தத்தை  ,  மனதை அமைதிப்படுத்தும் காரணிகளைக் கொண்டு சந்தியுங்கள். இயற்கையோடு ஐக்கியம் வைத்துக் கொள்ளுங்கள். மலைகளும், பள்ளத்தாக்குகளும் , ஓடைகளும் இளைப்பாறுதலைக் கொண்டு வருகின்றன.  ஆறுதலளிக்கும் ஆலயத்தின் ஆராதனைப் பாடலைக் கேளுங்கள். 
ஜெபத்தோடும் ,  ஐக்கியத்துடனும் கர்த்தருடைய வாக்குத் தத்தங்களை தியானியுங்கள். 
I I) தவிர்க்கப்பட முடியாத  கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். 
"தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்"
ரோமர் 8 :28
பல கிறிஸ்தவர்கள் மன  அழுத்தத்தால்  துன்பப் படக் காரணம் அவர்கள்  தவிர்க்கப்பட முடியாத  கட்டளைகளுக்கு எதிர்த்துப் போராடுவதுதான். 
ஏசு மன அழுத்தத்தை வெற்றி
கொள்ள காரணம்  அவர் கடுமையான சூழ்நிலைகளைக் கண்டு கலங்காததுதான். முடியாதவற்றை அவர் வாக்குறுதிகளாக்கிக் கொண்டார். அப்படித்தான்  நாமும் செய்ய வேண்டும்.  சில சமயங்களில் நம்மால் மாற்ற முடியாத சூழல்களை நாம்  ஏற்றுக் கொண்டு,  கர்த்தர் மீது நம்பிக்கை வைத்து மீதமுள்ள  காரியங்களை நம்மால்  இயன்றளவு சிறப்பாகச்  செய்யவேண்டும். 
III) பிரச்சினை  உள்ளவர்களைத் தேற்றுங்கள் : 
"தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்"
2 கொரிந்தியர் 1 :4
பல கிறிஸ்தவர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு மற்றவர்களை 
ஆறுதல் படுத்தத் தவறிவிடுகின்றனர்.  
சுயநலமான  விருப்பங்களிலேயே சார்ந்திருக்கின்றனர். ஏசு கிறிஸ்து மற்றவர்களின் கஷ்டங்களைக் குறித்து அக்கறை எடுத்துக் கொண்டார்.  அவர் வியாதியஸ்தர்களை சுகமாக்கினார்,  பார்வையற்றோருக்குப் பார்வை கொடுத்தார் அத்துடன் பாவிகளையும் மன்னித்தார். 
குறைவுபட்டவர்களுக்கு உதவுவதிலும் நாம் ஆர்வம் காட்ட வேண்டும.  பிரச்சனை உள்ளவர்களைத்  தேற்றுவது  நம்முடைய குறைபாடுகளையும் தீர்க்க உதவுகிறது. 
IV) இடைவிடாது முழு அக்கறையோடு கர்த்தரை நம்புங்கள்.
" எல்லாக் காலங்களிலும் அவரை நம்புங்கள் " 
சங்கீதம் : 62 -8
நாம் மனஅழுத்தத்தை வெல்ல  வேண்டுமென்றால் , எல்லா நேரங்களிலும் தேவ பிரசன்னம் குறித்த  உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் எப்போதும்  அவருடைய பிரசன்னத்தை உணர்வதில்லை,   ஆனால் விசுவாசத்தினால் அவர் நம்மோடு  இருக்கிறாரென்பதை நாம் அறிந்திருக்கிறோம்.  நாம் தனிமையானவர்கள் அல்ல  என்பதால் நம்மால் கர்த்தரை நம்ப முடிகிறது. 
அவர்,  எபிரேயர் :13-5  மூலமாய்  நமக்கு வாக்களித்திருக்கிறார் , 
" நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை,  உன்னைக் கைவிடுவதுமில்லை ".
கர்த்தரின் பிரசன்னத்தை பழகிக் கொள்ளுங்கள்.  
நாம் கர்த்தருடைய சித்தத்தின்படி நடக்கவும் நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும் , அவர் தம்முடைய காரியங்களை நம்மைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் , பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். (காண்க ரோமர் :6-13)
புனிதர் 

 
No comments:
Post a Comment