Wednesday 8 July 2015

தியானம் :" சோர்ந்து போகாதே"

தியானம் :" சோர்ந்து போகாதே"
ஏசாயா 40: 29 சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
1. ஜெபம் செய்வதில் சோர்ந்து போகாமல் இருக்க வேண்டும்.
சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்.லூக்கா 18 :1
2. நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல் இருக்க வேண்டும். 
நன்மை செய்வதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக.கலாத்தியர் 6 : 9.
நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்.   ஆதியாகமம் 4 :7.
3. கர்த்தர் கடிந்து கொள்ளும் போது சோர்ந்து போகாமல் இருக்க வேண்டும்.         
என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே., அவர் கடிந்து கொள்ளும் போது சோர்ந்து போகாதே. நீதிமொழிகள் 3 : 11 
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்து கொண்டு, சிட்சிக்கிறேன்: ஆகையால் நீ ஜாக்கிரதையாய் இருந்து மனந்திரும்பு. வெளிப்படுத்தின விசேஷம் 3 : 19.
4. நற்கிரியைகள் செய்வதில் சோர்ந்து போகாமல் இருக்க வேண்டும், 
சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து மகிமையையும், கனத்தையும், அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார்.ரோமர் 2:7.
இவ்விதமாய் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு 5 : 16.      


No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord