Friday 10 July 2015

சவுல் என்பவன் எப்படி பவுலாக மாறினான்?

Praise The Lord
சவுல் என்பவன் எப்படி பவுலாக மாறினான்?

அப்போஸ்தலர் 13:9 பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் என்று காணப்படுகிறது. பவுல் என்ற வார்த்தைக்கு சிறியவன், அற்பமானவன் என்று பொருள். பவுலின் தாழ்மையையும், ஏழ்மையையும், கிறிஸ்துவுக்காக அவன் அடிமையாக போய்விட்டதையும் குறிக்கிறது.

அப்போஸ்தலர் புத்தகம் மொத்தம் 28 அதிகாரங்களைக் கொண்டது. இதில் பவுலைப் பற்றின ஊழியம் மற்றும் செய்திகள் 13 முதல் 28அதிகாரங்கள்வரை சொல்லப்பட்டுள்ளது.
புதிய ஏற்பாட்டில் பாதி புத்தகம் அதாவது 13க்கும் மேற்பட்ட புத்தகங்களை பவுல் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அப்போஸ்தலர் 13 முதல் 28 அதிகாரங்கள்வரை உள்ள சம்பவங்கள் பவுலைச் சுற்றியே உள்ளது.

சவுலின் மன மாறுதலைக் குறித்த விஷயம் அப்போஸ்தலர் புத்தகத்தில் மூன்று இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்.9:1-20 வசனங்களிலும், அப்.22:1-26 வசனங்களிலும், 26:1-19 வசனங்களிலும் பவுலின் மனமாறுதலைக் குறித்து பேசப்பட்டுள்ளது. பவுலைப் பற்றி அவன் எப்படி இரட்சிக்கப்பட்டான், எப்படி மனம் மாறினான், எவ்விதமாக கிறிஸ்துவைப் பின்பற்ற ஆரம்பித்தான் என்ற சம்பவம் மூன்று முறை வருகிறது.

ஏன் மூன்று இடங்களில் பவுலுடைய மனமாறுதல் பற்றி ஆவியானவர் வைத்திருக்கிறார்? 

சவுலின் மனமாறுதலை சரியாக நாம் படித்தோமானால் இன்றைய கிறிஸ்துவத்தை நாம் புதுப்பிக்கலாம். விழிப்புணர்வு செய்ய வைக்கலாம். நம்முடைய இரட்சிப்பையும் சீர் செய்து கொள்ளலாம்.

கிறிஸ்தவர்களை துன்பப்படுத்துவதற்காக தமஸ்குவை நோக்கி சவுல் போகிறான். அப்படி போகும்போது கர்த்தர் அவனை எதிர் கொள்கிறார். அப்போஸ்தலர் 9:3-6 ‘அவன் தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது, சவுலே, சவுலே, நீ என்னை ஏன்; துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன், ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர், நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து, ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர், நீ எழுந்து பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.’

சவுல் ஒரு யூதன். பழைய ஏற்பாட்டை நன்றாக அறிந்தவன். இயேசுவை தேவனுடைய குமாரன் என்றும், அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார் என்பதை ஓப்புக் கொள்ளாதவனாகவும் இருந்தான். 
இயேசுவை யூத மார்க்கத்துக்கு விரோதியாக அவன் நினைத்தான். கிறிஸ்துவ சபையை யூத மார்க்கத்திற்கு எதிரியாக அவன் பார்த்தான். வேரோடு அழிக்க அவன் விரும்பினான். இயேசு என்ற நபர், சிலுவையில் அறையப்பட்டதாகவும், அதோடு அவர் முடிந்து விட்டதாகவும் அவன் நினைத்திருந்தான். இந்த இயேசுவைதான் அவன் தமஸ்குவுக்குப் போகிற வழியிலே சந்திக்கிறான். அவரின் சத்தத்தைக் கேட்கிறான். இயேசு உயிரோடிருக்கிறார் என்பதை உடனே அவன் புரிந்து கொள்கிறான்.
அப்போஸ்தலர் 9:9 ‘அவன் மூன்றுநாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்.’ இது அவனின் மனமாறுதலை காண்பிக்கிறது. மூன்றுநாள் சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தது ஏன்?


கிறிஸ்துவின் சபையை மிகவும் பாழ்ப்படுத்தி, அநேகரை கொலை செய்ததால் அவனின் துக்கத்திற்கு அளவேயில்லை. அதனால் அவன் சாப்பிடாமலும், குடியாமலும் வேதனையோடு இருந்தான். இதே தமஸ்கு பட்டணத்தில் அனனியா என்னும் ஒரு சீஷன் இருந்தான். கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி, ‘சவுல் என்பவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான், உன் வருகைக் காக காத்திருக்கிறான் என்கிறார். அனனியா என்பவன் சவுலை சந்திக்கிறான், ‘நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்கிறான். (அப்.9:17) 

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord